28 Aug 2020

புகழ் செத்த மனிதர்


 

விழிப்பு வேறு வேறு

நடுநிசி நாய்களோ

அதிகாலைப் பறவைகளோ

ஒலிப்பு ஒன்றுதான்

விழிப்பு வேறு

*****

புகழ் செத்த மனிதர்

வமதிப்பையும் பொருட்படுத்தாமல்

விருதுக்காக அமைதி பேசுகிறாய்

துரோகிகளின் பட்டியலில்

சேர்க்கப்பட்ட பிறகும்

வீதியில் இறங்க யோசிக்கிறாய்

மலம் தின்னும் பன்றியும்

பலம் கொண்ட வரைக்கும் முறைக்கும்

பன்றிக்கு மலம் தந்த

நன்றிக்கேனும் நிமிர்ந்து நிற்பதில்

தடை ஏற்படுத்தும்

உன் முதுகெலும்பின் எண்

எதுவென்று சொல்

இன்னும் சில நாட்கள் வரை

நீர் பருகாமல்

எச்சில் நீர் பருகி நீ உயிரோடு இருக்கலாம்

உடல் உயிரோடு இருப்பதற்காகவெல்லாம்

புகழ் உயிரோடு இருக்காது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...