15 Aug 2020

விண்மீன் வளர்ப்பு

 

விண்மீன் வளர்ப்பு

சிறுதொட்டி வைத்து

வண்ண மீன்கள் சில வளர்க்க

யாருக்குப் பிடிக்கும்

பெருந்தொட்டியை விட பெரிது

அந்திக் கருத்தால்

நீரூற்ற தேவையில்லாமல்

உணவென ஏதும் போடும் அவசியம் இல்லாமல்

இரவு வானத் தொட்டியில்

துள்ளிக் குதிக்கும்

விண்மீன்கள் போதும்

*****

இன்னும் கொஞ்சம் தொடரும்

இன்னும் சில நூல்கள்

இன்னும் சில வரிகள்

இன்னும் சில சொற்கள்

இன்னும் சில எழுத்துகள்

தூக்கம் வருகிறது

பிறகு பார்த்துக் கொள்ளலாம்

கனவில் பல நூல்கள் வரிகள் சொற்கள் எழுத்துகள்

வாசிப்பை நிறுத்த முடியாதவர்கள்

உறக்கத்திலும் அதையே செய்து கொண்டிருப்பார்கள்

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...