27 Aug 2020

அதிகாரக் கிருமிகள்

 


இயல்பை அறிய முடியாது

இயல்பாக இருப்பதில் எல்லாம் இருக்கிறது

இயல்பை மாற்றிக் கொள்வதில் என்ன இருக்கிறது

கோபம் உன் இயல்பென்றால் கோபப்படு

புன்னகை உன் இயல்பென்றால் புன்னகை செய்

எது உன் இயல்போ அதில் இருப்பாய்

உலகம் உன்னை அப்படி இருக்க விடாது

உலகத்துக்காக நீயும் அப்படி இருக்க மாட்டாய்

உலகம் உன்னை மாற்றியதோ

உலகுக்காக நீ மாறினாயோ

இயல்பில் இருப்பதை நீ அறிய முடியாது

நீ இருப்பதை நீ அறிய முடிந்தால்

இயல்பில் நீ இல்லை என்பதை அறிந்து கொள்

*****

அதிகாரக் கிருமிகள்

உன் சின்ன அதிகாரத்தில்

வீட்டை மிரட்டுவாய்

கொஞ்சம் பெரிதானால்

ஊரை மிரட்டுவாய்

இன்னும் கொஞ்சம் பெரிதானால்

வட்டாரத்தை மிரட்டுவாய்

மிகப் பெரிதானால்

நாட்டை மிரட்டுவாய்

உலகை மிரட்டுவாய்

நீ அப்படித்தான் இருக்கப் போகிறாய்

பெரிய பதவியில் இருந்தாலென்ன

சாமன்யனாக இருந்தாலென்ன

கொலையில் சின்ன கொலையென்ன

பெரிய கொலையென்ன

கிருமி போலிருந்தென்ன

டைனோசர் போலிருந்தென்ன

அதிகாரம் வதைக்கும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...