21 Aug 2020

கொஞ்சம் கவிதையோடு இருங்கள்

 

கொஞ்சம் கவிதையோடு இருங்கள்

ஓவியங்கள் பொய் சொல்கின்றன

இசை ஓர்மையாய் ஏமாற்றுகிறது

நாடகங்கள் வேடம் போடுகின்றன

திரைப்படங்கள் வியர்வையை உறிஞ்சுகின்றன

அரசியல் இரத்தங்களை உறிஞ்சுகின்றனது

கலைகள் போலியாகி விட்டன

கவிதைகள் பரவாயில்லை

அவ்வபோது அழுகின்றன

உக்கிரமாகின்றன

உணர்ச்சியோடு இருக்கின்றன

கவிதையோடு யார் இருக்கிறார்கள்

அவரவர்கள் கிடைக்கும் சுயநலத்தைப்

பொறுக்கி எடுத்துக் கொண்டு

கட்டுரை வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்

சிறுகதையில் எளியோர்களை வஞ்சிக்கிறார்கள்

நாவலில் கொன்று தீர்க்கிறார்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...