நடையைத் தந்தவர் நன்றிக்குரியவர்
எனக்குப்
பதிலாக
இரு
சக்கரங்கள் ஓடுவதை
இரு
சக்கர வாகனம் என்கிறார்கள்
எனக்குப்
பதிலாக
நான்கு
சக்கரங்கள் சுழல்வதை
மகிழ்வுந்து
என்கிறார்கள்
எனக்குப்
பதிலாக
துடுப்பு
அசையாமல் நீந்தும் அதை
கப்பல்
என்கிறார்கள்
எனக்குப்
பதிலாக
அசையாத
றெக்கைகளால்
காற்றில்
பறக்கும் அதை
விமானம்
என்கிறார்கள்
என்
கால்கள் சக்கரங்கள் றெக்கைகள் துடுப்புகள்
இயந்திரங்களிடம்
இருக்கின்றன
சக்கரங்கள்
எனக்காகச் சுழல்கின்றன
எனக்காக
நான்கு கால்களால் நிற்பதை
நாற்காலி
என்கிறார்கள்
கால்
முளைத்த என் நாற்காலியை
சக்கர
நாற்காலி என்கிறார்கள்
சக்கரங்கள்
எனக்காகச் சுழல்கின்றன
சக்கரங்களைக்
கண்டுபிடித்தவர்
நன்றிக்குரியவர்
நடக்காத
கால்களுக்கு
நடையைத்
தந்தவர் அவர்
*****
No comments:
Post a Comment