19 Aug 2020

பிரி சொற்கள்

 

பிரி சொற்கள்

இணைந்திருப்பதைச் சொற்கள் பிரிக்கின்றன

வடக்கென்றும் தெற்கென்றும்

சொல் உண்டானப் பிறகு

ஒன்றென இருந்த நிலம் இரண்டெனப் பிரிகிறது

கிழக்கென்றும் மேற்கென்றும்

சொல் உண்டானப் பிறகு

ஒன்றென இருந்த தெரு இரண்டெனப் பிரிகிறது

ஒவ்வொரு புள்ளியும்

முதற் புள்ளியும் முடிவுப் புள்ளியுமாகும் வட்டத்துக்கு

சொல் உண்டானப் பிறகு

துவக்கப் புள்ளியும் இறுதிப் புள்ளியும் முடிவாகிறது

சிந்தாத மழையும் மொழியும்

ஏன் சிதறப் போகிறது

பிரித்து எழுதும் சில சொற்களில்

எழுத்துகள் கூடுவதைப் பார்த்து

பிரிக்கப் பார்க்கின்றன சொற்கள்

சேர்த்து எழுதும் சில சொற்களில்

எழுத்துகள் குறைவதைப் பார்த்து

சேர்ப்பதைத் தடுக்கின்றன சொற்கள்

ஒற்றை நாக்கு சொல் வீசினால்

இரண்டு துண்டாகிறது வாழ்க்கை

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...