24 Aug 2020

தலைவர் தியானிக்கிறார்

தலைவர் தியானிக்கிறார்

எங்கள் தலைவர் எப்போது விழிப்பார்

தியானத்தில் இருக்கும் அவரை

எழுப்பி விட மனமில்லாமல்

போராடிக் கொண்டு இருப்பவர்கள்

மோன நிலைக்குச் சென்று கொண்டு இருக்கிறார்கள்

தாகத்தால் நாக்கு வறண்டவர்கள்

மயங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள்

பசியால் கெண்டை பிரண்டவர்கள்

மூச்சின் கடைசிக் காற்றை

இழுத்துப் பிடிக்க முடியாமல்

மரணித்துக் கொண்டு இருக்கிறார்கள்

எங்கள் தேசம் பாலைவனமானப் பிறகு

எங்கள் தலைவர் தியானத்திலிருந்து விழிப்பார்

எங்கள் பூமி மயானப் பூமி ஆனப் பிறகு

எங்கள் தலைவர் விழிப்புணர்வு பெறுவார்

எங்கள் கல்லறைகள் மீது அமர்ந்து

எங்கள் தலைவர் மீண்டும் தியானத்தைத் தொடர்வார்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...