நாடுங்கள் நல்கப்படும்!
பெருமைக்கும்
அருமைக்கும் காரணமான மாபெரும் சிந்தனைகளை விட்டுச் சென்றவர்களை வணங்குவோம்!
மாமனிதர்களின்
சிறந்த சிந்தனைகள் மனதைச் செழுமையாக்கட்டும்!
மாமனிதர்களின்
எண்ணங்கள் நமது இதயங்களில் படர்வதாக மற்றும் தொடர்வதாக!
எந்த ஒரு
மனிதரும் தாமே மாமனிதராக முடியாமல் இருக்கலாம். மாமனிதர்களின் சொற்கள் அதற்கு வழிகாட்டுவதாக
இருக்கும்.
மாமனிதர்களின்
சொற்கள் நமக்காகவே சொல்லப்படுகின்றன. இதயத்தின் செவிக்காகச் சொல்லப்படும் இனிய சொற்கள்
அவை.
நாம் மாமனிதர்களின்
சொற்களிலிருந்து கற்போம்!
அவர்களின்
சொற்கள் துயரங்களுக்கு மருந்தாகின்றன, தனிமைக்குத் துணையாகின்றன, தவறுகளுக்குப் பாடம்
சொல்கின்றன.
யாருக்குத்
தெரியும் வரப் போகும் காலத்திற்கான சொற்கள் அவர்களிடம் இருக்கும்!
அவர்களின்
ஞானக் களஞ்சியத்தில் நாம் அதைத் தேடுவோம்!
ஆகவே புத்தகங்களை
நாடுங்கள் என்று மட்டும் வெறுமனே சொல்ல எனக்கு உரிமையில்லை.
அந்த ஞானக்
களஞ்சியங்களைத் தேடுங்கள் என்று சொல்ல ஒரு காரணம் இருக்கிறது.
அந்தக்
காலத்தில் நாம் எப்படி இருந்தோம், இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறோம், வருங்காலத்தில்
நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பதற்கு அந்த ஞானக் களஞ்சியங்களே கட்டியம் கூறப்
போகின்றன.
நாடுங்கள்
நல்கப்படும்!
பிடித்த
புத்தகம் ஒன்று கையிலிருப்பது இன்னொரு கையே துணையிருப்பது போல!
*****
No comments:
Post a Comment