26 Aug 2020

தொடங்கிய இடத்திலேயே ஓடும் நதி


தொடங்கிய இடத்திலேயே ஓடும் நதி

பயம்

பெரு வீட்டைக் கட்டச் செய்கிறது

பெரு வேலியிடச் செய்கிறது

பெரும் பூட்டு போடச் செய்கிறது

எவரையும் நெருங்க விடாமல் செய்கிறது

பணத்தைக் குவிக்கச் செய்கிறது

பெட்டியிலிடச் செய்கிறது

பெரும் பூட்டு போடச் செய்கிறது

எவருக்கும் உபயோகம் இல்லாமல் செய்கிறது

பயத்தைத் திறந்து விடு

உனக்குரியது உலகுக்கு உரியதாகி விடும்

நீயும் உலகுக்கு உரியவனாகி விடுவாய்

உன் பயம்

உன்னிடம் இருக்கும் வரையில்

உனக்குரியவனாகவே இருப்பாய்

தொடங்கிய இடத்திலேயே

ஓடிக் கொண்டிருக்கும் நதியைப் போல

*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...