கொரோனா கூத்துகள்!
இந்த கொரோனா காலத்திலும்,
தமிழகத்தின் உச்சபட்ச நடிகர் ஒருவரின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தியைத் தொடர்ந்து
எரிச்சலாகி அலைவரிசையை மாற்றினால், "நீ அதுக்கு சரிபட்டு வர மாட்டே!"ங்ற
வடிவேலுவின் நகைச்சுவை வருவது எதேச்சையாக நடப்பதா? வேண்டுமென்றே நடப்பதா? என்று புரியவில்லை.
*****
இப்போது அற்புத சுகமளிக்கும்
கூட்டம் என்றால் கொரோனாவுக்குத்தான்!
*****
இந்த வாட்ஸாப் காலத்தில்
கடிதம் போட முடியாதுதான். அதற்காக இந்த கொரோனா விடுமுறைக்குப் பொழுது போகாமல், எதற்கெடுத்தாலும்
தட்டச்சு பண்ண கூட யோசித்துக் கொண்டு எதுவாக இருந்தாலும் பேசிப் பேசியே அனுப்பி சொல்கிறார்கள்
என்று சொல்வதா? கொல்கிறார்கள் என்று சொல்வதா?
*****
கொரோனா பொதுத்தேர்வையே
போடா என்று ஒதுக்கி வைத்து விட்டது. இந்தப் பள்ளிகள் மட்டும் கட்டணத்தை ஒதுக்கி வைப்பதாக
இல்லை. திறக்காதப் பள்ளிக்கூடத்துக்குக் கட்டணம் கேட்கும் அதிசயமெல்லாம் நமது கல்வி
சிறந்த நாட்டில்தான் நடக்கும்.
*****
கொரோனவுக்கு எதிரான இந்தியக்
கட்டமைப்பு என்பது கிராமங்கள்தான். புறநகர் என்ற பெயரில் நிறைய
கிராமங்களை அழித்தப் பிறகும் இந்தியாவில் கிராமங்கள் இருக்கிறது என்பது அதிசயம்தான்.
*****
கொரோனா காலத்திலும் ஜோசியம்
பார்க்கிறேன், ஜாதகம் பார்க்கிறேன் என்று கிளம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆவ்சம்
மனிதர்கள்! கொரோனாவுக்கு முதலில் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும்! ஆயுசு கெட்டியா? அற்பாயுளா?
என்று.
*****
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தில் இருக்கும் போது சீனாவும், பாகிஸ்தானும்
மட்டும் எப்படி படையெடுப்பின் தாக்கத்தில் இருக்கிறதோ? உலகின்
புரிந்து கொள்ள முடியாத இரண்டு தேசங்கள்!
*****
சீனாவின் படை வரும் பின்னே, சீனாவின்
வைரஸ் வரும் முன்னே!
*****
நான் எந்த சீனப் பொருளையும் சீனாவில் சென்று வாங்கவில்லை. இந்தியாவிலேயே இந்தியப்
பணத்தைக் கொடுத்து வாங்கும்படி ஆகி விட்டது.
*****
பாதர்ஸ் டே கொண்டாட வேண்டும் என்ற அப்பாவைத் தேடிக் கொண்டிருந்தவரின் பெயர்
கொரோனா.
*****
No comments:
Post a Comment