9 May 2020

ஒரு துளி கடல்

ஒரு துளி கடல்

கொரோனா ஒரு நோய் என்பது போல, குடியும் ஒரு நோய். மதுபாட்டில்கள் குடிநோய்க்கான கிருமிகளாக இருக்கின்றன.
*****
தமிழ்ச் சமூகத்தின் முதன்மையான இலக்காக குடிநோய் மாறிக் கொண்டு இருக்கிறது. குடியும் குடியும் சார்ந்த வாழ்வு என்பது தமிழ் நிலத்தில் புதிதாக உருக் கொண்டு விட்ட  ஆறாம் திணை.
*****
ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுவதற்கு ஒரு மதுக்கடையை மூடினால் போதும். ஒரு மதுக்கடையைத் திறப்பதன் மூலம் ஆயிரம் சிறைச்சாலைகளைத் திறக்க வேண்டியதிருக்கும்.
*****
நமது பழக்கங்களுக்கு நம்மை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பழக்கப்படுத்தியவர்களை நோக்கியும் விரலை நீட்ட வேண்டியதாக இருக்கிறது. # குடிப்பழக்கம்.
*****
குடிப்பதற்காக சம்பாதிப்பதும், சம்பாதிப்பதற்காகக் குடிப்பதும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும் போது மனிதன் மலடு ஆவதோ, மலடு மனிதன் ஆவதோ தவிர்ப்பதற்கில்லை.
*****
என்றோ ஒரு நாள் ஒழியும் என்ற நம்பிக்கையில்தான் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது, கொரோனாவோடு குடியும்!
*****
தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்கொரு குணமுண்டு! #குடி - குடி - மொடாகுடி!
*****
குடிமகனில் என்ன பொறுப்பான குடிமகன்?! #மதுக்கடை வாயிலில்...!
*****
பஞ்சம் என்பான்! பட்டினி என்பான்! பசி என்பான்! குடிப்பதற்கான காசை உள் பையில் வைத்துக் கொண்டு!
*****
ஆல்கஹால் கலந்த சானிடைசர் கொரோனாவை ஒழிக்கலாம்! ஆல்கஹால் கலந்த சரக்குமா?!
*****
வசனம் 144:144 - நீ ஒரு வேளை குடிக்காமல் இருந்தால் உன் குடும்பத்தை மூன்று வேளை பசியிலிருந்து காப்பாய்!
*****
கொரோனாவால் செத்தவர்க்கே கணக்கு இருக்கிறது! குடியால் செத்தவர்க்கு எங்கே இருக்கிறது கணக்கு?!
*****
நடிப்பவர்களையும் குடிப்பவர்களையும் திருத்த முடியாத நாடெங்கள் நாடு! இஃதைப் பாடுவதில் இங்கு எமக்கில்லை ஈடு!
*****
கடைசி குடிமகன் இருக்கும் வரை ஓட்டுக்கு நோட்டும், நோட்டுக்கு ஓட்டும் இருக்கும்.
*****
டீக்கடைகளுக்கு முன்பாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன  - அது ஒரு கொரோனா காலம்!
*****
மதுவின் ஒவ்வொரு துளியும் ஒரு துளி கடல். நான்காம் கடற்கோளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது தமிழகம்.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...