கோரோனா என்று எதைப் போட்டாலும் அது
பிரேக்கிங் நியூஸ் ஆவதால், பிரேக்கிங் நியூஸ் என்ற சொல்லுக்குப் பதில் இனி கொரோனா
என்ற சொல்லையே பயன்படுத்தலாம் போல!
இம்போஷிஷன் செய்து மீண்டும் மீண்டும்
ஒப்புவிக்கும் குழந்தைகள் போல ஊடகங்கள் கொரோனா என்ற சொல்லையே நொடிக்கொரு தரம்
மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. கிட்டதட்ட கொரோனா என்ற சொல்லை
ஊடகங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கான பிராண்டுகளாக மாற்றி விட்டன. இந்த உலகில் எது நடந்தாலும்
அது கடைசியில ஊடகங்களுக்கே லாபமாக முடிகின்றன. என்ன செய்வது ஊடக விளம்பரங்களால் ஆனாது
இவ்வுலகு!
*****
குழந்தைகள் கேட்கும் கேள்விகள் எப்போதும்
விநோதமானவையாக இருக்கின்றன. சான்றுக்கு ஒன்று, 'கொரோனாவுக்குக் கொரோனா வந்தா என்ன
செய்யும் அப்பா?" - பதில் தெரிந்தவர்கள் சொல்லலாம்!
அதற்கு முன் அதற்கு மகள் சொன்ன பதிலையும்
பார்த்து விடலாம், “கோரோனாவுக்கு கொரோனா வந்தா செத்துப் போயிடும் அப்பா! அப்புறம் இந்த
உலகத்துல கொரோனா இருக்காது!”
நீங்கள் உங்கள் பதிலையும் சொல்லுங்கள்!
*****
கொரோனாவின் தோற்றம் குறித்து எனக்கு
ஐந்து விதமான கருத்துகள் இருக்கின்றன.
1. அது தானாக பரிணாம வளர்ச்சி அடைந்து
உண்டாகியிருக்க வேண்டும்.
2. Bio War க்கான மனித கண்டுபிடிப்பாக
இருக்க வேண்டும்.
3. ஆய்வகத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக
உருவாக்கப்பட்டது தப்பித் தவறி வெளிவந்திருக்க வேண்டும்.
4. அதை அழிக்கும் ஏதோ ஒரு இயற்கையின்
சங்கிலியை மனிதன் அழித்ததால் உண்டாகியிருக்க வேண்டும்.
5. ஏற்கனவே இருந்த இக்கிருமி பருவநிலை
மாறுபாட்டால் பல்கிப் பெருகியிருக்க வேண்டும்.
*****
பார்ப்பவர்கள் எல்லாம் கேட்கும் ஒரே கேள்வி
கொரோனாவுக்கு என்னத்தான் தீர்வு என்பதாக இருக்கிறது. அப்படி என்னதான் தீர்வு இருக்கும்
என்று யோசிக்கும் போது நான்கு விதமான தீர்வுகள்தான் தோன்றுகின்றன.
1. கிருமியிடமிருந்து ஒதுங்கியிருத்தல்.
இதைத்தான் தனித்திருத்தல், விலகியிருத்தல், வீட்டிலிருத்தல் என்கிறார்கள்.
2. தடுப்பு முறைகள். இதற்காகத்தான் கை
அலம்புதல், சானிடைசர் உபயோகித்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல் போன்றவற்றைச்
செய்ய சொல்கிறார்கள்.
3. நோய் எதிர்ப்பாற்றல். இதற்காகத்தான்
புரதச் சத்து மற்றும் வைட்டமின் டீ நிறைந்த உணவை உட்கொள்ள சொல்கிறார்கள். அத்துடன்
கபசுர குடிநீர் போன்றவற்றைக் குடிக்கச் சொல்கிறார்கள்.
4. தடுப்பு மருந்து. இதைத்தான் கண்டுபிடித்துக்
கொண்டு இருக்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment