22 Apr 2020

கொரோனாவுக்கான நோய்த்தடுப்பு மருந்தை நெருங்கும் தமிழ் மருத்துவம்

கொரோனாவுக்கான நோய்த்தடுப்பு மருந்தை நெருங்கும் 
தமிழ் மருத்துவம்

            கொரோனா நோய் தடுப்புக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடைபெற்று வரும் தற்போதைய சூழ்நிலையில் தமிழின் பாரம்பரிய சித்த மருத்துவமே கொரோனா நோய்க்கான மிகச் சிறந்த தடுப்பூசியாக இருப்பது நிரூபணம் ஆகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழரின் தனிப்பெரும் மருத்துவமான சித்த மருத்துவம் சார்ந்த மூலிகைப் பொருள்கள் அதற்கான தடுப்பூசிகளாக அமைகின்றன.
            ஒருவேளை கொரோனாவுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது சித்தமருந்துகளில் ஒன்றிலிருந்தோ அல்லது சிலவற்றிலிருந்தோ கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மலேரியாவுக்கான நோய்த் தடுப்பு மருந்து சின்கோனா மரப்பட்டைகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதைப் போல இதைப் புரிந்து கொள்ளலாம். இது குறித்த ஆய்வுப்பூர்வமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
            இதைப் புரிந்து கொள்வதற்கு முன் தற்போதைய சூழ்நிலையில் நோய்த்தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது எவ்வாறு எளிமையாகியுள்ளது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். ஒரு நோய்க்கிருமிக்கான நோய் தடுப்பு மருந்தைக் கண்டறிவதற்கு அக்கிருமியை வைத்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் மாறியுள்ளது. நோய்க்கிருமியை வைத்து ஆய்வு செய்யாமல் அது எப்படி சாத்தியம் என்று கேட்டால்... அந்நோய்க்கிருமிக்கான மரபணு மாதிரிதான் அதற்கான சாத்தியத்தை வழங்குகிறது.
            நோய்க்கிருமியின் மரபணு மாதிரியை கணினி மென்பொருள் மூலம் தற்போதைய சூழலில் வடிவமைக்க இயலுகிறது. கணினியில் வடிவமைக்கப்பட்ட நோய்க்கிருமியின் மரபணு மாதிரியைக் கொண்டு அதன் மரபணுவில் பொதிந்துள்ள புரத அமைப்பை நுட்பமாக அணுகலாம். நோய்க்கிருமியின் புரத அமைப்பை அறிந்து விட்டால் அப்புரத அமைப்பைத் தடுக்கும் எதிர் புரத அமைப்பைக் கண்டறிந்து விடலாம். இவ்வாறு கண்டறியப்படும் தடுப்பு மருந்து நோய்க்கிருமியின் தொற்றைத் தடுத்து நிறுத்தக் கூடியதாக இருக்கிறது. இம்முறையில் மருந்து கண்டறிவதே எதிர்நிலை நோய்த்தடுப்பு மருந்தியல் (Reverse Vaccinology) எனப்படுகிறது.
            இம்முறையில் தமிழின் சித்த மருத்துவப் பாரம்பரிய மருத்துவப் பொருள்களான சிற்றரத்தை, அழிஞ்சில், ஏழிலைப்பாலை, நீர் பிரம்மி, திப்பிலி, கோரைக்கிழங்கு, அமிர்தக் கொடி எனும் சீந்தில், நொச்சி, ஆடாதொடை, கடுக்காய், கற்பூரவல்லி ஆகியவற்றில் உள்ள புரதக் கட்டமைப்பு கொ‍ரோனாவின் புரதக் கட்டமைப்பை மேலும் பரவ விடாமல் தடுப்பதாக இருப்பது கணினி மென்பொருளின் மரபணு மாதிரி ஆய்வு முடிவுகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது.
            இதைத் தொடர்ந்து கொரோனாவுக்கான நோய் தடுப்பு மருந்தை தமிழ் மருத்துவத்தின் பாரம்பரியப் பொருள்களிலிருந்து கண்டுபிடித்து அதற்கான முதற்கட்ட ஆய்வுகளை நிறைவு செய்துள்ளது தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்.  கண்டுபிடிக்கப்பட்ட இம்மருந்தை இனி சோதனை செய்து பார்க்க வேண்டிய ஒரு பணி மட்டும் எஞ்சியுள்ள நிலையில் நமது பாரம்பரிய மருத்துவப் பொருளில் இருக்கும் கொரோனாவுக்கு எதிரான புரத அமைப்பை ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.
            கொரோனா வைரஸில் 200 க்கும் மேற்பட்ட புரக்கூறுகள் உள்ளதாகவும், அதில் மூன்று வகையான புரத மூலக்கூறுகளே நோய்த்தொற்றைத் தடுக்க விடாமல் செய்வதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அம்மூன்று புரத மூலக்கூறுகளையும் தமிழின் பாரம்பரிய மருத்துவப் பொருட்களில் அடங்கியுள்ள புரத மூலக்கூறுகள் சிறப்பாக கட்டுப்புடுத்துகின்றன. அவ்வண்ணம் சிறப்பாக நமது தமிழின் பாரம்பரிய மருந்துப் பொருள்களில் அடங்கியுள்ள புரதக் கட்டமைப்பு குறித்து வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளைக் கீழே காணலாம்.
வ.எண்
தமிழ் மருந்து
புரத வேதிக்கூறு
1.
சிற்றரத்தை
கலான்ஜின்
2.
சீந்தில்
பெர்பரைன்
3.
திப்பிலி
பைபரின் மற்றும் செசாமின்
4.
கடுக்காய்
எலாகிக் ஆசிட் மற்றும் செபுலினிக் ஆசிட்
5.
அழிஞ்சில்
அலன்ஜைன்
6.
கற்பூரவல்லி
லூடியோலின்
7.
நொச்சி
கேஸ்டின் மற்றும் க்ரிஸோபீனால்
8.
கோரைக்கிழங்கு
கெடலீன் மற்றும் ரொடாலின்டன்
9.
ஏழிலைப்பாலை
எகடமின்
10.
ஆடாதொடை
வேசிசைன்
11.
நீர் பிரம்மி
பேசோட்டை-ஏ
இதன்படி பார்க்கையில் கொரோனாவுக்கான நோய்த்தடுப்பு மருந்தை தமிழின் சித்தமருத்துவம் நெருங்குகிறது எனலாம். இதற்கு முன்பே சிக்கன்குன்யா, டெங்கு போன்றவற்றிற்கு சரியான தடுப்பு மருந்துகள் உலகளவில் இல்லாத நிலையில் தமிழின் சித்தமருத்துவம் தந்த நிலவேம்பு குடிநீர் அவற்றைச் சிறப்பாக குணமாக்கியுள்ளதைக் கருத்தில் கொண்டால், கொரோனாவுக்கான நோய்த்தடுப்பு மருந்தையும் தமிழின் சித்தமருத்துவம் தந்திருப்பது தமிழுக்கும், தமிழருக்குமான சிறப்பு என்று கூறுவதில் மிகையேதும் இல்லை என்றே கூறலாம். தமிழராய் இத்தகவலை உலகெங்கிலும் பகிர்வதில் பெருமையடைவோம்.
மேலும் கபசுர குடிநீரின் பகுதிப்பொருள் பற்றி இத்துடன் ஒப்பிட்டு அறிய https://teachervijayaraman.blogspot.com/2020/04/blog-post_10.html என்ற இணைப்பைச் சொடுக்கி ஒப்பு நோக்கவும்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...