21 Mar 2020

வெறி கொண்ட ஓட்டம்

செய்யு - 394        

            "ஊருக்கே புள்ளெ பெத்துப் போட்டாளாம் ஒருத்தி! அவ்வேம் புருஷங்காரனோட சேர்ந்து புள்ளைய பெத்துக்க முடியலியாம் அந்தச் சிறுக்கிங்ற கதைதாங் மாப்ளே!" அப்பிடின்னிருக்காம் இவ்வேம்.
            "ன்னடா இத்து! ஊர்ல இருக்குற பசு மாடுக எல்லாத்தையும் செனையாக்குற காளைய வெச்சிக்கிட்டு, வூட்டுல ஒரு பொட்டெ கழுதெ செனையாகாம கெடக்குதுன்னா... டேய் அந்தக் காளையையே பின்னாடி வுட்டு செருவ வுட வேண்டியத்தாம்டா!" அப்பிடின்னிருக்காம் அவ்வேம்.
            இதெ கேட்டதுக்குப் பிற்பாடு வீயெம் மாமாவுக்கு வந்திச்சுப் பாருங்க கோவம். "எவ்வேம்டா அத்து?" அப்பிடின்னு காட்டுக் கத்தலா ஒரு சத்தம் வந்திச்சு வீயெம் மாமாவோட வாயிலேந்து.
            பேசுனவம் எல்லாம் அடங்கிட்டாம். ஒருத்தனும் வாயெத் தொறக்கல.
            "எவ்வேம்டா அத்து? எவ்வேம்ன்னு இப்போ வாயத் தொறந்து சொல்றீங்களா இல்லியா?"ன்னு கேட்டிச்சி வீயெம் மாமா.
            வீயெம் மாமா போட்ட சத்தத்துல பேசிட்டு இருந்த ஆளுகளுக்கு உள்ளார ஒரு நடுக்கம் உண்டாச்சி. எதையோ பேசப் போயி, வெளையாட்டுக்கா பேசுறதா நெனைச்சி வெனையாயிப் போச்சுன்னு பேசுன ஆளுங்க தெரங்கிப் போயிட்டாங்க. சில விசயங்கள்ல அமைதி நிலவுதுன்னா அதுதாங் அந்த விசயத்துக்குக் கொடுக்குற மருவாதி. அதெ அத்தோட வுட்டுக்கிட்டுக் கண்டுகிடாம போயிடணும். அப்பிடிப் போயிட்டா பெரச்சனை அத்தோட முடிவுக்கு வந்துப்புடும். பேசுறவனும் அதுக்கு மேல பேசுனா பெரச்சனையாயிடும்னு நாக்கை அடக்கிப்பாம். அப்பிடியிப்படி பேசலாம்னு நெனைச்சிக்கிட்டு இருக்கிறவனும் வாலைச் சுருட்டி வெச்சிப்பாம். அதெ புரிஞ்சிக்கிட்டு அத்தோட வுடணும். அப்படி வுட முடியலன்னா அதாங் பெரச்சனைய பெரிசாக்கி வேற வெதமா கொண்டு போயிடும்.
            வீயெம் மாமாவுக்கு ஆத்திரம் அடங்கல. கோவத்த கட்டுப்படுத்திக்க முடியல. அதோட மனசு குமுறுது. செய்யுற பாவத்தைக் கொறைச்சிக்கிட்டவேம் கூட நாட்டுல இருக்காம், வர்ற கோவத்தை அடக்கிக்கிட்டவேம் எவ்வேம் இருக்காம்? மூத்திரத்த அடக்குனாலும் ஆத்திரத்தெ அடக்க முடியாதுன்னு கிராமத்துல அதெ வேடிக்கையா சொல்லுவாங்க. வந்த கோவத்துக்கு வீயெம் வுடாம பேசுனுச்சிப் பாருங்க.
            "இப்பிடில்லாம் கேட்டா வார்த்தெ வராது. பொட்டப் பயலுகளா! ஒத்த அப்பனுக்குப் பொறந்திருந்தா... ஒன்னயப் பெத்த குச்சிக்கார மவ்வே ஒருத்தனுக்குத்தாம் முந்தி விரிச்சி ஒன்னயப் பெத்திருந்தா... மின்னாடி வந்து சொல்லுடா நாம்தாம் பேசுனேம்ன்னு?" அப்பிடின்னு வீயெம் மாமா பேசுனதுக்குப் பெறவுதாம் அந்த ரெண்டு ஆளுகளுக்கும் நடுக்கம் போயி கோவம் வந்திருக்கு.
            "யார்ரப் பாத்துடா பொட்டப் பயலுங்றே? ஒரு கொழந்தையப் பெத்துக்க வக்கில்லாத நீயி பொட்டப் பயலா? எம்மட வூட்டுல நாலு குஞ்சுக் குளுப்பானுங்க அங்ஙகனயும் இங்ஙனயும் திரிஞ்சிட்டுக் கெடக்குதுங்க! நாம்ம பொட்டப் பயலா?" அப்பிடின்னு அவ்வேம்கள்ல ஒருத்தெம் நெஞ்சத் தாட்டிக்கிட்டு மின்னாடி வந்திருக்காம்.
            "வுடு மாப்ளே! சீலையக் கட்டிக்கிட்டுத் திரிய வேண்டியவனுக்கு வேட்டிய கட்டி வுட்டா இப்பிடித்தாம் பேசுவாம்!" அப்பிடின்னு இப்போ இன்னொருத்தெம் நக்கல் வேற பண்ணிருக்காம்.
            "எலே யாரு ஏரியாவுல வந்து பேசிட்டு நிக்கேறேன்னு புரியுதா? சங்கறுத்துக் கையில கொடுத்துப்புடுவேம்டா!" அப்பிடின்னிருக்கு வீயெம் மாமா.
            "போடா! பொட்டப் புழுக்கு! பேசிட்டா ஆச்சா? ஒங் காளைய ஏத்தி வுடுடா ஒம் பொண்டாட்டி மேல. பத்தே மாசத்துல கிடேரி கன்னாப் போடுவா ஒம் பொண்டாட்டி. அப்ப கூட கிடேரி கன்னத்தாம் போடுவா ஒம் பொண்டாட்டி! காளெ கன்னப் போடா மாட்டாடா பொட்டைக்கிப் பொறந்த பொட்டே!" அப்பின்னிருக்காம் மாரத்  தாட்டிக்கிட்டுப் ‍பேசுனவேம்.
            "யார்ரப் பாத்துடா பொட்டெ பொட்டேங்றே? தெரியுமாடா நாம்ம பொட்டென்னு?" அப்பிடின்னிருக்கு வீயெம் மாமா.
            "காட்டுனாத்தாம்டா தெரியும் நீயி பொட்டய்யா இல்லேன்னு? அதெ வேட்டிய வெச்சி மறைச்சிக்கிட்டு பொட்ட இல்லன்னு ஆம்பளென்னு திரிஞ்சிக்கிட்டு இருக்குறேடா பொட்டே நீயி?" அப்பிடின்னு தாட்டிக்கிட்டு நின்ன ஆளுவோ பேச வீயெம் மாமாவுக்குக் கோவம் எகிறிப் போச்சுது. கோவத்துல என்னா பண்றதுன்னு தெரியாம வேட்டியை அவித்துப் போட்டு, ஜட்டிய எறக்கி விட்டுச்சுப் பாருங்க! கேட்டவனுங்க மெரண்டுப் போயிட்டானுங்க.
            கோகிலா மாமி தலையில அடிச்சிக்கிட்டு உள்ளார ஓடிப் போயி ஒரு போர்வைய எடுத்துக் கொண்டாந்து மறைக்கப் பாத்திருக்கு. வீயெம் மாமா கோகிலா மாமியை எட்டி ஒரு ஒதை வுட்டுச்சுப் பாருங்க. அத்து மல்லாக்க அடிச்சிக்கிட்டு அந்தாண்ட விழுந்துச்சு. சுத்திப் பாத்துட்டு நின்ன ஆளுகளுக்கு ஏத்தோ வெவகாரம் பெரிசா ஆவப் போவுதுன்னு தோண ஒவ்வொருத்தரும் நைசா ஒண்ணுஞ் சொல்லாம நவுற ஆரம்பிச்சிட்டாங்க.
            பேசிட்டுக் கெடந்த அந்த ஆளுகளுக்கும் கோவம் அடங்கலியா, யில்லே இன்னுங் கொஞ்சம் ஏத்தி வுட்டுப் பாப்போமுன்னு நெனைச்சானுங்களோ தெரியல.

            "இப்பிடிச் சுன்னியக் காட்டிக்கிட்டு நின்னா நீயில்லாம் பெரிய ஆம்பளையா? ஒஞ் சுன்னியில வர்ற மூத்தரத்துலல்லாம் பொட்டாச்சியால கொழந்த பெத்துக்க முடியாதுடா. வாம்டா வாம் வந்து எஞ் சுன்னிய ஊம்பி வழியுறதெ நாக்கலா நக்கிக் கொண்டு போயி ஒம் பொண்டாட்டி புண்டையில வையுடா! அப்பிடியாவது கொழந்தெ பொறக்குதுன்னா பாப்பேம்!" அப்பிடின்னிருக்காம் பேசிட்டு இருந்த ரெண்டு ஆளுங்கள்ல ஒருத்தெம்.
            "ந்நல்லா பெரிசாத்தாம்டா இருக்குடா ஒக்காள ஓலி! பெறவு ஏம்டா இன்னும் செனைப்படா இருக்குறா ஒம்மட பொண்டாட்டி? நாஞ்ஞல்லாம் செனைப்படலன்னா அப்பிடியேவா வுட்டுப்புடுறோம் மாட்டெ. நாலு எடத்துக்குக் கொண்டு போயி காளைக்கித்தான போடுறேம். அத்துப் போல நீயும் ஒம் பொண்டாட்டியெ போட வுடணும்டா நாலு எடத்துக்குக் கொண்டு போயி!" அப்பிடின்னு இன்னொருத்தனும் சொல்லிப்புட்டு, சிரிச்சிக்கிட்டெ சொன்னவய்ங்க ரெண்டு பேரும் பிடிச்சானுங்க ஓட்டம்.
            வீயெம் மாமாவுக்கு வெறி உண்டாயிப் போச்சுது. கீழே எறக்கி விட்ட ஜட்டியத் மேல தூக்கி விட்டுக்கிட்டு, பக்கத்தால கெடந்த ஒரு மரச்சட்டத்தெ கையில எடுத்துக்கிட்டு அவனுங்கள தொரத்திக்கிட்டு ஓட ஆரம்பிச்சிச்சு. அவனுங்க பாஞ்சாலம்மன் கோயிலக் கடந்து மெயின்ரோட்டப் பிடிச்சி பொன்னியம்மன் கோயிலத் தாண்டி போன எடம் தெரியாம பறந்துட்டானுங்க. வீயெம் மாமா மேல போட்டிருக்குற சட்டை, கீழே போட்டுருக்குற ஜட்டியோட ரோடு முழுக்க வெறி பிடிச்சாப்புல ஓடுனுச்சு, ஓடுனுச்சு அப்பிடி ஓடுனுச்சு. பேசிட்டு ஓடுன ஆளுகளெ ஒருத்தனையும் அதால பிடிக்க முடியல. ஓடுனவனுவோ சும்மா ஓடாம, "வாராம்டா வாராம்டா பொட்டப் பயெ தொரத்திக்கிட்டு வாராம்டா! பொட்டப் பயெ தொரத்திக்கிட்டு வாராம்டா! அவ்வேம் ஜட்டிய கெழட்டி வுட்டுப்புட்டுப் பாருங்கடா! பொட்டப் பயெ ஜட்டியப் போட்டுக்கிட்டு வாராம்டா! ஜட்டியப் போட்டு மறைச்சிக்கிட்டு வாராம்டா! சுன்னித்தாம் இல்லாம பொம்மெ சுன்னிய கட்டிக்கிட்டு வாராம்டா! அதெ கழட்டி வுடுங்கடா! பொட்டப்பயெ சுன்னிய கழட்டி வுடுங்கடா!" அப்பிடின்னு ராகம் போட்டுக்கிட்டு பாட்டா பாடிட்டு வேற ஓடியிருக்கானுவோ. அதெ கேட்டுக் கேட்டு வேற ஆத்திரம் தாங்கல வீயெம் மாமாவுக்கு.
            ரோட்டுல ஜட்டியோட தொரத்திக்கிட்டு ஓடுன வீயெம் மாமாவ பிடிச்சி, ஒரு வேட்டிய கட்ட வெச்சிப் பிடிச்சிட்டு வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அதோட ஒடம்ப பிடிச்சா அத்து நெருப்பா கொதிச்சிச்சு. "யார்ரப் பாத்துப் பொட்டப் பயலுங்கங்றானுவோ? ஆம்பளென்னா ஒத்தைக்கி ஒத்தெ நின்னிருக்கணும். பொட்டப் பயெ மாதிரிக்கி ஓடிப் போயிட்டு யார்ரப் பாத்துப் பொட்டப் பயெங்றானுவோ? தாயோளி நாயிங்க. எந்த ஏரியா அவுனுங்கன்னு வெசாரிச்சி வெச்சி வெளுத்து எடுக்குறேன்னா இல்லீயான்னு பாரு!"ன்னு கீறலு வுழுந்த இசைத்தட்டு போல சொன்னதையே சொல்லிக்கிட்டுக் கெடந்துச்சு வீயெம் மாமா.
            ஒரு வாரம் வரைக்கும் ஒடம்பு நெருப்பா கொதிச்சி அடங்குனுச்சி வீயெம் மாமாவுக்கு. டாக்கடருக்கிட்டெ கொண்டு போயி ஊசியக் குத்தலன்னா வீயெம் மாமா ஒடம்பு கொதிச்ச கொதிப்புக்கு எரிஞ்சிச் சாம்பலாவே போயிருக்கும். அன்னிலேந்து ஒழுங்க மழிச்சிக்கிட்டு இருக்குற மொகத்தெ தாடிய வெச்சி மூட ஆரம்பிச்சிச்சு. நறுக்கி நறுவிசு பண்ணிக்கிற மீசைய நறுக்காம முறுக்கி வுட ஆரம்பிச்சுச்சு. காலையில எழுந்திரிச்சதும் டீத்தண்ணியக் குடிக்கிற வியெம் மாமா குவார்ட்டர்ர எடுத்து ஊத்திக்க ஆரம்பிச்சிச்சு. காலங்காத்தால ஆறு மணி வாக்குல பட்டறைய தொறந்து வெச்சி வேலைய ஆரம்பிச்சிதுன்னா மதியானம் பன்னெண்டு மணி வரைக்கும் மாடு போல வேலையப் பாத்திச்சு. அதுக்குப் பெறவு வேலை கெடையாது.
            எங்க வெளியில போனாலும் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கையில ஒரு பிரஸ்லெட், ஒரு வெரல்ல ரண்டு மோதிரம், கழுத்துல செயின்னு, தோள்ல துண்டுன்னு பந்தாவா போயி வர்ற ஆரம்பிச்சிச்சு. வீயெம் மாமாவோட புதுப்போக்க யாராலயும் தடுத்து நிறுத்த முடியல. பேசுறதும் ரொம்ப தெனாவெட்டா மாற ஆரம்பிச்சிடுச்சு. எந்த வாக்கியத்தெ பேசுனாலும் ஒக்கால ஓலின்னோ, புண்டெ மவனேன்னோ, தேவிடியா நாயோன்னோ வார்த்தெ இல்லாம அதால பேச முடியல.
            வூட்டைச் சுத்திக்கிட்டு கெடந்த அத்தனை பூனைக, பூனைக்குட்டிக, நாயிக, நாயிக்குட்டிகள அடிச்சித் தொரத்திடுச்சு வீயெம் மாமா. அத்தோட இருந்த அத்தனை மாடு கன்னுகளையும், காளை மாட்டோட அரை ‍வெலைக்கும், கொறை வெலைக்குமா வித்துப்புட்டு மறுவேலை பாத்திச்சு.
            "இன்னொருத்திய கட்டிக்கிட்டு வந்து நாம்ம ஆம்பளையா இல்லையான்னு நிருபீக்கலெ எங்கப்பன் வைத்தி ஆச்சாரிக்குப் போறந்தவேம் இல்லடா நானு!" அப்பிடின்னு சபதம் வேற பண்ணிச்சு.
            இந்தச் சங்கதிய கேள்விப்பட்டு வீயெம் மாமாவோட வாலிபக் காலத்து தொடுப்பான கருவாட்டுக்கார சேசம்மா கெழவிதாம் வீயெம் மாமாவ தேடி வந்து வாசல்ல நின்னு விசாரிச்சிருக்கு. விசாரிச்சது வீயெம் மாமாகிட்டெ கேட்டிருக்கு, "ஏம்டா பொண்டாட்டின்னு ஒருத்தி வந்ததும் என்னய மறந்திட்டீயே! அதாம்ட ஒனக்கு இப்பிடியாயிட்டு. ஏம் நம்மள ரண்டாவதா கட்டிக்கியேம். மன்மதக் குஞ்சாட்டாம் புள்ளைகளப் பெத்துப் போடுறேம். ஒம் பொண்டாட்டியோட சக்களத்திச் சண்டையெல்லாம் வெச்சிக்க மாட்டேம் பாத்துக்கோ. நாம்ம பாட்டுக்கு அஞ்ஞ இருக்கேம். ஒம்மட பொண்டாட்டிப் பாட்டுக்கு இஞ்ஞ கெடக்கட்டும். வாரத்துக்கு ஒரு ராத்திரி வந்துட்டுப் போனாலும் சரிதாம்டா எம்மட ராசாங்கம். சரின்னு சொல்லு நாளைக்கிக் கொழந்தையப் பெத்துப்பேம்!" அப்பிடின்னிருக்கு.
            வீயெம் மாமா ஒண்ணும் பேசல. அப்பிடியே காலை எட்டி ஓங்கி ஒரு ஒதை வுட்டிருக்கு. அந்த ஒதையில நிலைதடுமாறி தலைகுப்புற வாசல்லேர்ந்து வுழுந்திருக்கு கருவாட்டுக்கார கெழவி. வுழுந்தது அப்பிடியே கருவாட்டுக் கூடையே எடுக்காம கூட பறந்து ஓடிருக்கு. ஓடிப் போன பிற்பாடு அத்து ஒரு சங்கதிய ஊருல பரப்பி வுட்டுச்சு, "இந்த வீயெம் பய ஜட்டிப் போடாம வேட்டிய மட்டும் கட்டிட்டு அலையுறாம்! ஊருல இருக்குற பொட்டச்சிவோ பாத்து நடந்துக்குங்கடி. எந்த நேரத்துலயும் வேட்டியத் தூக்கிக்கிட்டு உள்ளார வுட்டப்புடுவாம் நாதாரி. அத்துச் சரி வுட்டாத்தாம் ன்னா! உளுத்துப் போன கம்பு நொழையுறதுக்குல்லாம் கொழந்தெ பொறக்குமா ன்னா?" அப்பிடின்னு.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...