19 Jan 2020

29.3



            ஓர் இலக்கியக் கூட்டம் ஆரம்பித்தால் அங்கே கவிஞர்களின் எண்ணிக்கைக்குக் குறைவு இருக்காது. ஒவ்வொரு இலக்கியக் கூட்டமும் அதை நிரூபிக்கிறது. இந்தக் கூட்டத்தில் மேலும் இரண்டு கவிஞர்கள் தங்கள் கவிதைகளைப் பகர்கிறார்கள்.
            அதில் ஒருவர் வேலு. அவர் வாசிக்கிறார்.
            "நம் அகல் கலை இலக்கியக் கூட்டம்
            அகல் ஒளி காட்டித் தூய்மையாக்கும்.
            அல்லல் நிலை போக்க அரிய துணையாகும்.
            தமிழ்த்தாய்க்கு அணி சேர்க்கும் நற்கூடமாகும்.
            தரமான தமிழ் இங்கே நர்த்தனமாடும்.
            மாதம் ஒரு முறை நிச்சயம் கூடும்.
            மாற்றுக் கருத்துகளை நமதாக்கிக் கொள்ள
            இலக்கிய விருந்துக்கு வாரீர்!
            இலக்கு இது என காணீர்!"
கவிஞர்களுக்கு வார்த்தைகள் கிடைத்து விடுகிறது. அவர்கள் கோர்த்து விடுகிறார்கள். அதில் உண்மை இருக்கிறது, இல்லை என்ற அவசியமில்லை. அந்த வார்த்தைக் கோர்ப்பு அவர்களின் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது. அந்த மகிழ்ச்சிக்காகவே அவர்கள் வார்த்தைகளைக் கோர்க்கிறார்கள். மற்றபடி வார்த்தையில் என்ன இருக்கிறது வார்த்தை? அது சரி! இந்த நாவலே வார்த்தைகள்தான் அன்றோ! அது வேறு, இது வேறோ என்னவோ!
            லதீஃப் ஒரு கவிதையை அடுத்து வாசிக்கிறார்.
            "பெருகி வரும் உலக மயம்
            காசாக்கும் தனியார் மயம்.
            பெட்டிப் பாம்பாக்கும் கணினி மயம்
            உலகெங்கும் வங்கிகளின் வட்டி மயம்
            நன்செயில் நட புன்நெயில் நட
            மலட்டு விதை மயம்
            உள்நாட்டுச் சந்தையில்
            வெளிநாட்டு பொருள் மயம்
            ஒவ்வொருவர் பையிலும் கடன் மயம்"
ஆகா! அருமை! என்று கை தட்டுகிறார்கள் கூட்டவாதிகள். அது சத்தமாய் எழும்பி மொத்தமாய் அடங்குகிறது. அடுத்து வில்சன் அண்ணனைக் கதை சொல்ல விடுவதா? விகடவைப் பேச விடுவதா? என்ற குழப்பம் தோன்றி மறைகிறது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...