18 Jan 2020

29.2



            ஏப்ரல் 2012 இல் நடைபெற்ற அந்தக் கூட்டத்துக்கு சோதிடர் சாமி அய்யாவும் வருகை தந்திருக்கிறார். அவர் தான் எழுதி வந்திருக்கிற சித்திரை மாதத்தின் முக்கிய நாட்கள் குறித்தும், சித்திரை மாத ராசி பலன் குறித்தும் கூட்டத்தினருக்குச் சொல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்ததில் கூட்டவாதிகள் அதற்கு அனுமதி தருகிறார்கள். சோதிடமும் நம் இலக்கியத்தின் ஆதியில் இருந்தது என்கிறார் கூட்டவாதிகளுள் ஒருவர்.

            "என்னுடைய சோதிடம் என்பது நாற்பது வருட ஆராய்ச்சியின் இடைவிடாத முயற்சிக்குக் கிடைத்திருக்கிற பலன். இதை இந்த உலகம் உய்ய பயன்படுத்த விழைகிறேன். முதலாவதாக சித்திரை மாதத்தின் முக்கிய நாட்கள் குறித்துக் கூறி விடுகிறேன்.
            13.04.2012      வெள்ளி        - நந்தன வருடம் பிறக்கிறது.
            21.04.2012      சனி                 - அமாவாசை தினம் ஆகிறது.
            23.04.2012      திங்கள்           - அன்றைய தினம் கார்த்திகை.
            04.05.2012      வெள்ளி        - அன்று அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.
            05.05.2012      சனி                 - அன்றைய தினம் சித்ரா பெளர்ணமி
சித்திரை மாதம் யாருக்கெல்லாம் நற்பலன் கொண்டு வர இருக்கிறது, யாருக்கெல்லாம் பாரிகாரங்களைச் செய்ய வைக்கப் போகிறது என்பதை இப்போது சொல்லப் போகிறேன்.
            அதாவது பார்த்தீர்களானால், மேஷம், ரிஷபம் ராசிகளுக்கு கடும் உழைப்பில் இந்தச் சித்திரை மாதத்தில் வெற்றி கிட்டும். மிதுனம், சிம்மம், தனுசு, மீனம், துலாம் ராசிகளுக்கு திடீர் யோகமும், பண வரவும், புது முயற்சியில் வெற்றியும் கிட்ட இருக்கிறது. கடகம், கன்னி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு தடைகளைக் கடந்தால் முன்னேற்றம் காத்திருக்கிறது. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மட்டும் எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது. இந்த மாதத்திற்கான தோஷ ராசிக்காரர்கள் பரிகாரமாக சனி பகவானை எள் தீபம் போட்டு வழிபாடு செய்யவும்." என்று முடிக்கிறார் சோதிடர் சாமி அய்யா.
            கூட்டவாதிகளும் சிலர் இதை ரசித்துக் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வந்ததன் நற்பலன் கிட்டயதாக அவர்களது மனதுக்குள் மகிழ்ச்சி அடைவது அவர்களது முகத்தில் தெரிகிறது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...