"நானும் என் கவிதையை வாசித்து விடுகிறேன்!"
என்கிறார் அண்ணாதுரை. இந்தக் கூட்டத்தின் புதிய வரவு அவர். ஆவலோடு அதை ஏற்றுக் கொள்கிறார்கள்
கூட்டவாதிகள்.
"இலவசம் இனி
எங்களுக்கு வேண்டாம்
வேலை மட்டுமே வேண்டும்" இதை வாசிப்புச்
செய்து விட்டு இதற்குத் தலைப்பு 'வேண்டும்' என்பதாக அண்ணாதுரை குறிப்பிடுகிறார்.
"சில குடும்பங்கள் வாழ
பல குடும்பங்கள் வாயில்
வாய்க்கரிசி" இதை வாசிப்புச் செய்து
விட்டு இதற்குத் தலைப்பு "குடி குடியைக் கெடுக்கும்" என்பதாகச் சொல்கிறார்
அண்ணாதுரை.
இந்தக் கூட்டத்துக்கு இன்னொரு புதிய வரவாக
கண்ணன் ஆசிரியர் இருக்கிறார். அவர் தானும் கவிதை எழுதி வந்திருப்பதாகச் சொல்லி வாசிக்கத்
தொடங்குகிறார்.
"அன்பைப் போதியுங்கள்!
ஆத்திரத்தைக் குறையுங்கள்!
இசையுடன் கற்பியுங்கள்!
ஈகைக் குணம் கொள்ளுங்கள்!
உண்மையைப் பேசுங்கள்!
ஊக்கத்தைக் கற்றுக் கொடுங்கள்!
எறும்பு போல சுறுசுறுப்பாயிருங்கள்!
ஏன் என்று கேள்வி கேட்கத் தூண்டுங்கள்!
ஐயத்தை நீக்குங்கள்!
ஒற்றுமையை நாடுங்கள்!
ஓடி ஆடி விளையாடுங்கள்!
ஒளவை போல் தமிழ் பரப்புங்கள்!" இதை
வாசித்து முடிக்கையில் அவர் இதை 'ஆசிரியர் ஆத்திசூடி" என்கிறார்.
இந்தக் கூட்டத்தில் கவிதைகள் ஆத்திசூடியில்
தொடங்கி ஆத்திசூடியில் முடிந்து எல்லாம் ஆத்திசூடி மயமாக இருக்கிறதே என்று ஒளவையை
மனதில் நினைத்துக் கொள்கிறார்கள் கூட்டவாதிகள்.
*****
No comments:
Post a Comment