16 Jan 2020

29.0



            மேடையில் நீண்ட நேரம் பேசுவது மேஜர் ஆபரேஷன் என்றும், குறுகிய நேரம் பேசுவது மைனர் ஆபரேஷன் என்று கொள்ளப்படுகிறது / எள்ளப்படுகிறது. கனமானப் பேச்சை சபை தாங்காது. நீண்ட நேரப் பேச்சுக்கு இடையிடையே பாடல், கவிதை, நகைச்சுவை என கொடுத்து சுவாரசியம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. அரிசிச் சோற்றையே சாப்பிட்டுக் கொண்டிருப்பதற்கு இடையில் கூட்டையோ, பொறியலையோ தொட்டுக் கொள்வதைப் போல அது அவசியமானதாக இருக்கிறது.

            பெருமாள் அய்யாவை எழுப்பி ஒரு கவிதையை வாசிக்கச் சொல்கிறார்கள். அவர் ஆத்திசூடி வடிவில் தான் எழுதியதை 'உயிரே! உயிரே!' என தலைப்பிட்டு வாசிக்கிறார்.
            "அன்னையைப் போற்று!
            ஆண்மையைக் கடைபிடி!
            இனிமையாகப் பேசு!
            ஈன்றோர் சொல் கேள்!
            உண்மைக்குக் கட்டுபடு!
            ஊழ்வினை அறு!
            எண்ணற்ற நூல் கல்!
            ஏழ்மைக்கு இரங்கு!
            ஐயன் வழி நில்!
            ஒற்றுமைக்குப் பாடுபடு!
            ஓதும் செயல் உயர்வு!
            ஒளவை மொழி நட!
            அஃதே நமக்கு வழியென உணர்!"
என்ற அவர் வாசித்து முடித்ததும் கொஞ்சம் ஆசுவாசம் கொள்கிறது சபை. அந்த ஆசுவாசத்தைத் தக்க வைக்க அடுத்து மாணிக்கம் ஐயா தன் கவிதைப் பொழிவைச் செய்கிறார்.
            "தேசத்தின் ஏழ்மையை
            ஒட்டுப் போட்ட
            தார் சாலைகள் தெரிவிக்கின்றன" என்கிறார். அதற்கு கைதட்டல் கிடைக்கிறது.
            "தேசத் தடாகத்தை
            சுத்தம் செய்யும் சேவையில்
            உயிர் வாழும் மீன்கள்
            அரசியல்வாதிகள்" என்கிறார். அதை ஏற்க முடியாது என கண்டனக் குரல்கள் எழுப்புகிறார்கள் அமர்ந்திருக்கின்ற கூட்டவாதிகள். மாணிக்கம் ஐயா உட்கார்ந்து விடுகிறார்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...