15 Jan 2020

28.3


            "...தொடக்கத்தில் குருகுலக் கல்வி முறை சமூகத்தின் உயர் குலத்தினருக்காக  கல்வி போதிக்கும் அமைப்புகளாக இருந்தாலும் காலப்போக்கில் சில மாறுதல்களைச் சந்திக்கிறது.

            நூற்புலமை, ஒழுக்கம், உடற்பயிற்சி, இசை, தியானம், இறையுணர்வு, போர்க்கலை, சிலம்பம், குதிரையேற்றம், நீச்சல் என பல நிலைகளில் குருவுக்கு இருந்த அனுபவம் சீடர்களுக்குக் கல்வியாக மாற்றம் பெறுகிறது குருகுலத்தில். கலைமகள் அங்கு கல்விக்கடவுளாகப் போற்றப்படுகிறாள்.
            குருகுலத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடி மகிழ்கின்றனர் அக்காலத்திய சமூகத்தினர்.
            குருவின் இல்லத்தில் தங்கி, அவர் இல்லத்திலேயே உண்டு, அவர் இடும் கட்டளைகளை செவி மடுத்து, உடல் - உள்ளம் - ஆன்மப் பயிற்சிகளைப் பெறுகின்றனர் சீடர்கள்.
            தானியத்தில் முதன் முதலாக அகரத்தை எழுதித் தொடங்கும் கல்வியானது, குருவுக்குத் தொண்டு, கல்வியில் பயிற்சிகள் என விரிந்து நல்லொழுக்கமும், கட்டுபாடும் பெற்ற முழு மனிதராக நிறைவு பெறுவதில் குருகுலக் கல்வி முடிவு பெறுகிறது.
            குகைப் பள்ளிகள், திண்ணைப் பள்ளிகள், மரத்தடிப் பள்ளிகள் அனைத்தும் குருகுலத்தை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்படுகின்றன.
            நமது கல்வி வரலாறு குருகுலத்திலிருந்துதாம் தொடங்குகிறது. குருகுலத்தால் அனைவருக்கும் கல்வி என்ற நிலையைச் சாதிக்க முடியாமல் இருந்ததை, மக்களாட்சி அரசாங்கம் அமைந்து அக்குறிக்கோளைச் சாதிக்கிறது என்பதைப் பெருமிதமாகச் சொல்லலாம்.
            மக்களாட்சி அரசாங்கம் ஏற்பட்ட பிற்பாடு ஊருக்கு ஊர் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் குழுமும் பள்ளிக்கூடம் எனும் இடத்திற்கு ஆசிரியர் வருகிறார். அதுவரை ஆசிரியர் எனும் குருவைத் தேடி மாணவர்கள் சென்ற நிலை மாறி, மாணவர்கள் குழுமியிருக்கும் ஊருக்கு ஊர் உருவாக்கப்பட்ட பள்ளிகளைத் தேடி ஆசிரியர்கள் செல்லத் துவங்குகின்றனர்.
            கல்வி என்பது மாணவர்களை மையப்படுத்தியது என்ற நிலை அப்போதுதான் உருவாகிறது. ஆசிரியர் மையமாய் நிகழ்ந்த கற்றல் - கற்பித்தல் செயல்முறை, மாணவர் மையமாய் மாறத் துவங்குகிறது..."
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...