14 Jan 2020

28.2



            "... அங்கன்வாடி, மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி என்று பலவகைப்பட்ட பள்ளிகள் இருக்கின்றன. அதில் அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள், சைனிக் பள்ளிகள், கேந்திரியா வித்தியாலயா பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று ஏகப்பட்ட வகைகள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பாடத்திட்டங்கள். மாநில வழி, மத்திய வழி, சர்வதேச வழி என்று அதில் ஏகப்பட்ட வகைகள்.

            கல்வி சமத்துவத்தைத்தாம் போதிக்கிறதா? என்று சமயங்களில் எனக்கு ஐயப்பாடு வந்து விடுகிறது. கல்வி கற்பிக்கும் முறைகள் ஒன்றாக இல்லாத போது அது எப்படி சமத்துவத்தைப் போதிக்க முடியும்? ஒரு நாட்டுக்குள்ளே எப்படி பலவிதமான பாடத்திட்டங்கள் வேறுபாடுடன் தொடர்ந்து சமமான கல்வி கற்கும் குழந்தைகளை உருவாக்க முடியும்? ஒன்று இதில் அனைத்துப் பாடத்திட்டங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அல்லது ஒரே மாதிரியான பாடத்திட்டம் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும். பொதுவாக மாநில பாடத்திட்டத்தை விட மத்திய பாடத்திட்டம் உயர்ந்தது போல ஒரு தோற்றமும், மத்திய பாடத்திட்டத்தை விட சர்வதேசப் பாடத்திட்டம் உயர்ந்தது போலவும் ஒரு தோற்றமும் நிலவுகிறது.
            கல்வியை வழங்குவதிலும் முறை சார்ந்த கல்வி, முறை சாராத கல்வி, தொலைதூரக் கல்வி, திறந்த நிலைக் கல்வி என்ற பல வகைமைகள் இருக்கின்றன. அடிப்படையில் இப்படி பல வகைமைகள் இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. கல்வியை அனைவருக்கும் சென்று சேர்ப்பதன் நோக்கம் நிறைவே இப்படி பல வகைமைகள் இருப்பது சரிதான் என்றாலும் பலவிதமான பாடத்திட்டங்கள் பாகுபாட்டோடு கருதப்படும் நிலைமை சரியா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
            கல்வி வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். கல்வி நிலைகளில் பல்வேறு தளங்கள் உள்ளன. அது அவசியமும், தேவையும் ஆகும். ஆனால் கட்டாயம் அன்று.
            முதல் முறையாக உருவான கல்வி முறை என்பது குருகுல கல்வி முறை. இன்று கணினி, கைபேசி, வலைதளம் என்று தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் அன்று ஓலைச்சுவடிகளை முதுகெலும்பாகக் கொண்டு வளர்ந்தது குருகுல கல்வி முறை. அது உண்டு உறைவிட முறையில் நடைபெற்றது. இன்றைய உண்டு உறைவிட பள்ளிகளுக்கு எல்லாம் அடிப்படை அது. ஆனால் அன்றைய அம்முறையை இன்றைய உண்டு உறைவிட பள்ளி முறையோடு ஒப்பிட முடியாது. அதில் பல வேறுபாடுகள் இருக்கின்றன சாதக, பாதக அம்சங்களைத் தாண்டி அதில் விவாதிப்பதற்கான கூறுகள் நிறையவே இருக்கின்றன..."
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...