17 Dec 2019

22.0



A Typical Mystery
            ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு புதிய ஆள் கிடைப்பது ஓர் ஆச்சரியம். அது எப்படி மிக வித்தியாசமாக கிடைக்கிறார்கள் என்பது ஒரு வகைப் புதிர். உலகில் விசித்திரமாக நிறைய நடக்கின்றன. விசித்திரமான மனிதர்கள் நிறைய உருவாகிறார்கள்.

சந்தர்பாயும் அந்தர்லேடியும்
            அரண்மனை போன்ற வீட்டின் அந்த அழகை என்னால் வர்ணிக்க முடியாது. அந்த வீட்டிலிருந்து வரும் கானத்தை நீங்கள் கேட்டிருக்க முடியாது. புரியாத மொழியில் பாடப்படும் அந்த கானம் மனதை உருக்குகிறது. அந்தக் கானத்தின் வசீகரத்தில் நீங்கள் செத்து விழுவீர்கள்.
            படுப்பவர்கள் ஒருக்களித்து படுக்கிறார்கள். அவர்கள் தலை வைப்பதற்கென ஒரு சிறு பள்ளம் இருக்கிறது. நாம் தலையணை வைத்து மேடாக படுப்பதற்கு மாறானது அது. இனப்பெருக்க குறிகளைத் தவிரவும், கண்களைத் தவிரவும் உடல் முழுவதும் மறைக்க ஆடைகள் அணிந்திருக்கிறார்கள் அவர்கள். நீங்கள் எந்த இனப்பெருக்க உறுப்புகளை நினைத்து நினைத்து கிளர்ச்சி அடைவீர்களோ அது திறந்து இருக்கிறது. பார்ப்பவர்கள் யாருக்கும் எந்த கிளர்ச்சியும் இல்லை. பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் விட்டிருக்கிறது அவர்களுக்கு.
            திருமண நாளுக்கு முந்தைய நூற்று எட்டாவது இரவில் மணமகனையும், மணமகளையும் அந்த அரண்மனை வீட்டிற்குள் அழைத்து வருகிறார்கள். நள்ளிரவு நேரம் வரும் வரை மணமகனும், மணமகளும் அந்தக் கானத்தைக் கேட்டபடி மோன நிலையில் இருவேறு அறைகளில் அமர்ந்திருக்கிறார்கள். கேட்பவர்கள் செத்து விழக் கூடிய அந்தக் கானம் நின்றவுடன் மணமகனையும், மணமகளையும் ஓர் அறைக்குள் விட்டு அந்த அறையை வெளிச்சத்தால் நிரப்பி மூடுகிறார்கள். மணமகனும், மணமகளும் தங்கள் குறிகளைத் தரிசனம் செய்கிறார்கள். வழிபாடு செய்கிறார்கள்.
            செத்து விழும் கானத்தைக் கேட்டு, கண் கூசும் வெளிச்சத்தில் குறிகளைத் தரிசித்தவர்களை வெளியே அழைக்கிறார்கள். இதய பலகீனம் உள்ளவர்கள் தயவுசெய்து மேற்கொண்டு படிக்காதீர்கள். அதிர்ச்சியைத் தாங்க முடியாத உள்ளம் படைத்தவர்கள் தயவுசெய்து இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்த அத்தியாயத்திற்கு வந்து விடுங்கள்.
            மணமகனின் குறிக்குக் கீழே ஒரு கட்டையைக் கொடுத்து இருவர் பிடித்துக் கொள்கிறார்கள். ஒரு மிக் கூரிய தங்க வாளால் ஒரே வெட்டு. மணமகனின் குறி தெறித்துத் தூர விழுகிறது. ரத்தம் குபு குபுவென கொப்புளிக்கிறது. வெள்ளியால் செய்யப்பட்ட பாரையொன்றால் ரத்தம் குபு குபுவென கொப்புளிக்கும் இடத்தில் ஓங்கி ஒரே குத்து. ஓட்டை ஒரு சாண் அளவுக்கு உள்ளே விழுகிறது. அது மணமகனுக்கான பெண்குறி. ஆண் பெண்ணாகிறாள். அதே நேரத்தில் தெறித்துத் தூரத்தில் விழுந்த மணமகனின் குறி மணமகளின் குறி இருக்கும் இடத்தில் உடனுக்குடன் தையலிட்டு பொருத்தப்படுகிறது. மணமகளுக்கான ஆண்குறி. பெண் ஆணாகிறான். அடுத்தக்கட்ட நிகழ்வில் மார்பின் முலைகளிரண்டும் கூரிய தாமிரக் கோடரியால் சதுரித்து எடுக்கப்பட்டு ஆணின்று பெண்ணாகி விட்டவளுக்குத் தையலிட்டுப் பொருத்தப்படுகிறது. செத்து விழச் செய்யும் கானத்தின் இசை கொடூரத்தின் வலியைத் தாங்கும் சக்தியைத் தருகிறது.
            சரியாக நூற்று எட்டாவது நாள் குறிகள் பொருந்திக் காயங்கள் ஆறிப் போகின்றன. அவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்கிறது ‍அதே அரண்மனை போன்ற வீட்டில் செத்து விழச் செய்யும் கானத்தின் சாட்சியாக. ஒரு கொடூரத்தைச் சந்தித்த பின் நடக்கும் திருமணத்தில் அதற்குப் பின் எந்தக் கொடூரங்களும் இல்லை. ஆணைப் பெண்ணாக்கி, பெண்ணை ஆணாக்கி யார் ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம் செய்வது? யார் வரதட்சணைக் கொடுமை நிகழ்த்துவது? திருமணத்துக்கு நூற்று எட்டு நாட்களுக்கு முன்பு வாங்கிய மணமகனின் உடைகளும், மணமகளின் உடைகளும் இப்போது மாறிப் போகின்றன. யார் இதில் மணமகன்? யார் இதில் மணமகள்? மணமகன் ஒரு காலத்தில் மணமகளாக இருந்தவர். மணமகள் ஒரு காலத்தில் மணமகனாக இருந்தவர். மாலை மாற்றிக் கொள்வதோடு பெயர்களையும் மாற்றிக் கொள்கிறார்கள். மணமகனின் பெயர் சந்தர்பாய். மணமகளின் பெயர் அந்தர்லேடி.
*****


No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...