9 Dec 2019

19.5


            "என் ஒய்ப்பப் பத்திச் சொன்னேன்ல. ஸோ பியூட்டி. அழகு மட்டுமில்ல பொறுமை. பொறுமைன்னா பூமியை விட ஒரு நூலு மேல. இல்லன்னா கட்டுன அன்னிக்கே அவ ஓடியிருப்பா. பர்ஸ்ட் நைட் அன்னிக்கு நான் பண்ண காரியம் இருக்கே. பேக்தான் அடிச்சேன். அவளுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும். அத அவ ஏன் தாங்குனா? எதுக்காக தாங்குனா? போடா டாக்கிப் பயலேன்னு சொல்லிட்டு அவ ஏன் ஓடல? என்னால அவளோட பொறுமையப் புரிஞ்சிக்க முடியல. ரியலி அவள நான் படுத்தாதப் பாடு படுத்துனேன். நெறைய சொல்ல முடியாது விகடு. ஐயாம் எ செக்ஸூவல் சைக்கோபாத் சிம்ப்ளி. தட்ஸ் ஆல்.

            அவளோட பேக்க பாக்குறப்ப பீனீஸ் மூணு இஞ்ச் இருக்கும். அவ்வளவுதாம் பேக் அடிச்சி அடிச்சி அஞ்சு இஞ்சிலேந்து அது கரைஞ்சிப் போயிடுச்சி. அப்போ எக்ஸாட்லி மூணே இஞ்ச்த்தாம். அது எப்படி கரெக்டா சொல்றேன்னு பாக்கறீயா? ஒரு அடி ஸ்கேல் எந்நேரத்துக்கும் கையில வெச்சிருப்பேன். அத வெச்சி அளந்து பார்ப்பேன். ஒரு அடி ஸ்கேல்ல அது நாலுல்ல ஒரு பங்கு. அவ்வளவுதாம் இருக்கும். பேக்கப் பாக்கறப்ப மூணு இஞ்ச் இருக்குற அது அவளோட குறிப் பக்கமா வர்றப்ப ஒன்றரையா போயிடும். அதையும் அளந்து பார்ப்பேன். ரொம்ப கஷ்டமா இருந்திச்சி விகடு. ஐ யாம் சாரி விகடு. ஒன்னயப் போட்டு நான் சங்கடப்படுத்துறேன் போலருக்கு. பட் நான் இதெச் சொல்லணும். யார்கிட்டயாவது சொல்லணும். ஒரு மனுஷன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதுங்றதுக்கு நான் இருந்தேங்றத யார்கிட்டயாவது சொல்லி பாரத்தை எறக்கணும். ஐ லைக் யூ. பிகாஸ் யூ ஆர் ஸோ பேஸன்ஸ் ஆஸ் மை ஒய்ப்.
            அவளுக்குக் குழந்தைன்னா ரொம்ப பிரியம். எனக்குக் குழந்தையக் கொடுக்க முடியுமாங்ற நிலை. அவளோட குறியப் பாக்குறப்பல்லாம் அது சுருங்கி சுருங்கி உள்ளார போக ஆரம்பிச்சிச்சி. ரிடிகுலஸ். வாட் எ சேம்! பட் அவ ரொம்ப பொறுமையா இருந்தா ரொம்ப பொறுமையா. நிச்சயமா நான் ஒரு பொம்பளையா இருந்து, அவ ஒரு ஆம்பளையா இருந்திருந்தா நான் அவளை விட்டு ஓடிப் போயிருப்பேன். அவ ஓடல. என்னால முடியும்னு நம்புன்னா. நான் எப்படியும் மாறிடுவேன்னு நம்புனா. இப்படியே பேக்குல மூணு இஞ்சுக்கும், பிரண்டுல ஒன்றரை இஞ்சுக்குமா ஆறு வருஷம் ஒடிச்சு.
            ஆப்டர் மேரேஜ் சிக்ஸ் இயர்ஸ் குழந்தை இல்லேன்னா எல்லாரும் எப்படிப் பேசுவாங்க தெரியுமா? ஆனா என் ஒய்ப் தங்கிட்டத்தாம் கொறை இருக்குறதா பாக்குறவங்ககிட்டல்லாம் சொன்னா. உண்மையான கொறையான மனுஷன் நான்தான்னே. நான் நொறுங்கிப் போய்ட்டேன் விகடு. சுக்கு நூறா ஆயிட்டேன். அவளை அழைச்சுக்கிட்டு ஊர் ஊரா, கோயிலு கோயிலா சுத்துனேன். மலையில இருக்குற சாமியார்ங்கள ஒருத்தர விடாம பார்த்தேன். ஒண்ணும் வேலைக்கு ஆகல. நோ எரெக்சன். எனக்கு டிப்ரஷனும் அதிகமாயிடுச்சி. அதப் பார்த்தவ கொழந்தையே வேணாம்ன்னா. என்னால அதைத் தாங்கிக்க முடியல. அவ கண்ணு முன்னாடி தொங்கிடலாமான்ன தோணுச்சி. அத அவகிட்ட சொன்னேன். அவ அழுதா அழுதா அப்பிடி அழுதா. அதை என்னால தாங்க முடியல.
            யோகா, மூலிகைன்னு என்னென்னம்மோ என்னென்னம்மோ பண்ணிப் பார்த்தேன். சைக்காலஜிஸ்ட், எம்பிரியாலஜிஸ்ட்னு யார் யாரையோ பார்த்தேன். எதுவும் வேலைக்கு ஆகல. கரப்டட் மைண்ட்டை என்னப் பண்ணுவே? மைண்ட் தட்ஸ் த ஒன்லி மேட்டர் நாட் அண்டர்ஸ்டாண்டபிள். தட் இஸ் த ஒன்லி மெடிஷன் டூ ஆல். கரெப்டட் மைண்ட்டுக்கு நோ மெடிஷன். அதுவா சரியானாத்தான். ஒரு கட்டத்துக்குப் பிறகு நான் விட்டுட்டேன்.
            என்னை என்னப் பண்ணச் சொல்றே? ஆனா பாரு! எ மிராகிள்! அந்த ஒன்றரை இஞ்ச்க்குப் பொறந்தவன்தான் மை சன் மானோஸ்.
            எல்லாத்தையும் வுட்டுடு. நீ என்ன நினைக்குறீயோ அது நடக்கும். பிடிச்சுக்க்கிட்டே நிக்காதே. பிடிச்சுக்கிட்டு இருக்க இருக்க கை மரத்துப் போவும். நீ காரியம் ஆவுறதா நினைப்ப. உன்னோட கை உபயோகம் இல்லாம போயி உதிர்ந்துப் போயிடும்.
            என்ன நடக்கணுமோ அது நடக்கும். அத உன்னோட மனசால டிஸ்டர்ப் பண்ணாத. உன்னோட வாழ்க்கையில எதுவும் தப்புல்ல. எதுவும் டிஸ்டர்ப்பன்ஸ் இல்ல. பட் நீ உன்னோட மனசால டிஸ்டர்ப் பண்ணிக்கிறே. எதுவும் மனசால பண்ணாம என்ன பண்ணணுமோ அதப் பண்ணு. எல்லாம் சரியாப் போவும். நீ ஏன்டா அநாவசியமா சிந்திக்கிறே? அது உதிர்ந்துப் போவணும்.
            மை சான் மானோஸ் பிறந்த பிற்பாடு என்னோட லைப் ரொம்ப அழகாயிடுச்சி. என்னோட லைப் அப்படி எந்த நாள்லேயும் இருந்ததில்ல. அப்படி ஒரு பீல் குட்டை நான் பில் பண்ணதில்ல. நான் மனுஷனா வாழ ஆரம்பிச்சேன். அப்பத்தாம் நான் மனுஷனா மாறியிருந்தேன். என்னோட ஒய்ப் ரொம்ப அழகு. இன்னும் அழகானா. ஏற்கனவே என்ன கொண்டாடிட்டு இருந்தவ கொழந்ததை பிறந்த பிற்பாடு ரொம்பவே ரொம்பவே கொண்டாடினா. எங்க அப்பா, அம்மா பண்ண தப்பை நான் பண்ணல. என்னோட மானோஸ எங்க கூடவே வெச்சிப் படிக்க வெச்சோம். ஸ்கூல் கொண்டு போயி விடுறது, அழைச்சுக்கிட்டு வர்றது எல்லாமே நாங்க ரெண்டு பேரும்தான். எங்கேயாவது நீ ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ப்பா கொழந்தைய ஸ்கூலுக்கு அழைச்சுக்கிட்டுக் கொண்டு போயி விடுறதா பாத்திருக்கீயா?
            நல்லாத்தாம் வளர்த்தோம். ரொம்ப பாசமா,‍ ரொம்ப ப்ரீயா, ரொம்ப அவனுக்குப் பிடிச்ச மாதிரியெல்லாம் இன்டிபெண்டன்டா வளர்த்தோம்.
            பட் அவனா மேல மேல படிக்கணும்னு விருப்பப்பட்டான். வேணாம்னு கட்டாயப்படுத்தாம சொல்லிப் பார்த்தேன். பட் என் ஒய்ப் அவன் நிறையப் படிக்கணும்னு நினைச்சதை ரொம்ப விரும்புனா. அவளோட எந்த ஆசையையும் நிறைவேத்தாத பாவியில்லையா நான். ஸோ நான் குறுக்க நிக்கல. மை சன் மானோஸ் அவன் விருப்பப்படியே படிக்கப் போனான். கே.கே.எல்.ஆர். ஹயர் ஸ்டடீஸ் இன்ஸ்ட்டியூட். போனவன் போனவன்தான். போயிச் சேர்ந்துட்டான். அவளும் போயிட்டா. அதுக்கு மேல என்ன லைப் இருக்கு? நத்திங்க். கெளம்பிட்டேன். ஊர் ஊரா போகுது என்னோட லைப். நான் எதையும் டிஸ்டர்ப் பண்றதில்ல இத்தனை நாளா. இன்னைக்கு இந்தக் கூட்டத்தை, உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ஐயாம் ரியலி சாரி. பட் என்னை என்ன பண்ணச் சொல்றே? இன்னிக்கு இப்பிடி நடக்கணும்னு இருக்கு. வாட் கேன் ஐ டூ?"
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...