5 Dec 2019

19.1



            வில்சன் அண்ணன் ஒரு கதை சொல்கிறார்.

            தாத்தாவிடம் ஓடி வருகிறான் பேரன். அவருக்குத் தொழிலில் போட்டியாக இருந்தவர் கடையை மூடி விட்ட சங்கதியைச் சொல்கிறான். இதைக் கேட்டால் தாத்தா சந்தோஷப்படுவார் என்பது பேரனின் நினைப்பு. ஆனால் பாருங்கள்! தாத்தா கவலைப்படுகிறார்.
            தாத்தாவின் கவலை புரியாமல் தாத்தாவின் முகத்தைப் பார்க்கிறான் பேரன்.
            தாத்தா பேரனைப் பார்த்துச் சொல்லத் துவங்குகிறார். தொழிலில் போட்டி இருக்கும் வரைத்தான் உயர முடியும் என்கிறார். அவர் ஓட்டு வீடு கட்டிய போது, போட்டிக்காரன் ஓட்டு வீடு கட்டியதையும், அவர் மாடி வீடு கட்டிய போது, போட்டிக்காரன் மாடி வீடு கட்டியதையும் சொல்கிறார்.
            ஓட்டப் பந்தயத்தில் சரிக்குச் சரியாகப் போட்டிப் போட்டுக் கொண்டு ஓட ஆள் இருக்கும் வரை ஒரு வேகமும், சவாலும் இருக்கும் என்கிறார். அப்படி இருக்கும் போதுதான் மிஞ்சி ஓட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்கிறார் தாத்தா.
            இப்போது போட்டிக்காரன் இல்லை என்றால் நானும் இல்லை என்கிறார் தாத்தா. உழைப்புக்கும் முன்னேற்றத்துக்கும் போட்டி வேண்டும் என்கிறார்.
            போட்டிக்காரன் கடையை மூடியதற்கான வருத்தமும், கவலையும் தாத்தாவின் முகத்தில் படத் தொடங்குகிறது, பேரனின் முகத்திலும்தான் என்று கதையை முடிக்கிறார் வில்சன்.
            கேட்டுக் கொண்டிருந்த கூட்டவாதிகள் முகத்திலும் சோகம் அப்பத் தொடங்கியிருக்கிறது.
*****


No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...