24 Nov 2019

16.6



            மா.கா.பா.சோ.வை எதேச்சையாக தேநீர் விடுதியில் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது விகடுவுக்கு. அவன் தேநீர் அருந்துவதை விட்டு ஏழோ, எட்டோ ஆண்டுகள் ஆன பின் நண்பர்களுக்காக தேநீர் விடுதிக்குச் சென்ற போது நடக்கிறது துர்சம்பவமும், துர்சொல்லாடலும்.

            பார்த்தவுடன் விடுவைக் கட்டிக் கொள்கிறார் மா.கா.பா.சோ. உங்கள் கவிதைகளைத் தொடர்ச்சியாக தின சாம்பாரில் பார்க்கிறேன் என்கிறார் மா.கா.பா.சோ. தின சாம்பார் போன்ற இதழ்கள் கவிதைகளை வெளியிடுவதில்லை. செய்திகள் மட்டுமே வெளியிடுகின்றன.
            பாத்திருக்கலாம், நான் கவிதை எழுதுவதை விட்டு நாளாகி விட்டது என்கிறான் விகடு.
            ஆகா! கவிதையை விட்ட பிறகுமா கவிதைகள் வெளிவருகின்றன? இஃதே கவிதையின் மகாசக்தி! என்கிறார் மா.கா.பா.சோ.
            என்னிடம் கையெழுத்து வாங்கிய பிரதிகளை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்கிறான் விகடு.
            அதை ஆபிஸிலிருந்து எப்போதோ எடுத்து வந்து வீட்டில் வைத்து விட்டேன் என்கிறார் மா.கா.பா.சோ.
            உங்கள் ஆபீஸ் எங்கே இருக்கிறது? என்கிறான் விகடு.
            வீட்டோடு ஒட்டிய வீட்டுக்கு முன்புறம் இருக்கும் அறைதான் ஆபீஸ் என்கிறார்.
            பழைய சோபா கிடந்ததே! அதற்குப் பக்கத்திலுள்ள அறையா? என்கிறான் விகடு.
            கிட்டதட்ட சரி! என்கிறார் மா.கா.பா.சோ.
            அப்படியானால் தங்களது வீடு? என்கிறான் விகடு.
            அந்த அபீஸ் அறையைக் கழித்து விட்டு மற்றதெல்லாம் வீடு என்கிறார் மா.கா.பா.சோ.
            அங்கிருந்து அதாவது உங்கள் ஆபிஸீலிருந்துதான் உங்கள் மொட்டைக் கடுதாசிகளை எழுதுவீர்களா? என்கிறான் விகடு.
            தவறு! அலுவலகக் கடிதங்கள் என்று திருத்திக் கொள்ளுங்கள்! என்கிறார் மா.கா.பா.சோ.
            ஒவ்வொரு கடுதாசிக்கும் எவ்வளவு லாபம் பார்த்திருப்பீர்கள் என்கிறான் விகடு.
            கொஞ்சம் பழங்களையும், கொஞ்சம் ஸ்வீட் காரத்தையும் கொடுத்து ஏமாற்றியவன் நீ என்கிறார் மா.கா.பா.சோ.
            இப்போது என்னைக் கட்டிப்பிடித்தற்காக மொட்டைக் கடுதாசி எழுதுவீர்களா? என்கிறான் விகடு.
            கை விரல்கள் கொஞ்சம் நடுக்கமாக இருக்கிறது என்கிறார் மா.கா.பா.சோ.
            அவர் கைகளை முகத்திற்கு எதிரே ஏந்தி முத்தமிடுகிறான் விகடு.
            முத்தத்திற்கு முத்தமே பழி.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...