17 Oct 2019

4.17



            சாவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும் போது வாழ்வதற்காக வழிகள் இருக்காது? அப்படி வழிகள் இருக்கிறதா?
            கடன் தொல்லையால் சாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
            தேர்வு முடிவுகளால் தற்கொலைக்கு வாய்ப்பு இருக்கிறது.
            நீட் தேர்வு முடிவுகளால் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
            காதல் தற்கொலைகள் இருக்கின்றன.
            ஆன்லைன் தற்கொலைகள் உருவாகியிருக்கின்றன.
            திருமணத் தகராறுகளால் கொலை, தற்கொலை இரண்டும் இருக்கின்றன, நிகழ்கின்றன.
            அண்மைக் காலமாக தொழிலதிபர்களின் தற்கொலைகள் வரை பார்த்தாகி விட்டது.
            விளையாட்டு வீரர்கள், கைவினைக் கலைஞர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை பாரபட்சம் இல்லாமல் சாவதற்கான முயற்சிகளை எடுத்துப் பார்க்கிறார்கள்.
            ரயில் முன் பாய்பவர்கள், மண்ணெண்ணெயை ஊற்றிக் கொள்பவர்கள், நாற்பத்தது இரண்டாவது மாடியிலிருந்து குதிப்பவர்கள் - நினைத்துப் பார்ப்பவர்களுக்குப் பயமாக இருக்கலாம். பாய்பவர்களையும், ஊற்றிக் கொள்பவர்களையும், குதிப்பவர்களையும் வாழ்க்கை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறது.
            மிஸ்டர் மானா பானா மற்றவர்களின் சாவைக் கண்டு அவ்வளவு பயந்தவர். தனக்கும் ஒரு நாள் சாவு வருமா என்று அவ்வளவு மருண்டவர். அவர் ஒருநாள் தூக்கில் தொங்கினார் என்றால் நம்பவா முடிகிறது?!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...