குருவை ஏற்றுக் கொள்ள தயார்.
கடவுளை ஏற்றுக் கொள்ள தயார்.
எனக்கென்ன தயக்கம்?
அவர் ஏன் காசு கேட்கிறார்?
கடவுள் ஏன் உண்டியல் வைத்திருக்கிறார்?
உலகின் ஒவ்வொரு
தத்துவமும் இன்னொரு தத்துவத்தை உடைத்து விட்டே மெலெழுகிறது. தத்துவங்களுக்கும் - தத்துவங்களுக்கும்
ஓயாத சண்டை. மனிதர்களுக்கு அது வசதியாகப் போகிறது. தத்துவங்களைத் துணைக்கு அழைத்துக்
கொண்டு சண்டை போடுகிறார்கள். தங்களுடைய சண்டைகளைத் தத்துவங்களின் சண்டைகளாகவும்,
தத்துவங்களின் சண்டைகளைத் தங்களுடைய சண்டைகளாகவும் போட்டுக் குழப்பி விடுகிறார்கள்.
தத்துவாதிகளுக்கு இந்த இடம் வசதியாகப் போகிறது. அவர்கள் சம்பந்தமில்லாத ஒரு தீர்ப்பைச்
சொல்கிறார்கள். அது குத்து மதிப்பாக ஒத்துப் போகும். குத்து மதிப்பாக ஒத்துப் போகாமலும்
போகும்.
*****
No comments:
Post a Comment