10 Oct 2019

3.001



            "ரோட்டைப் பார்த்துத் திருப்புடா நாயே!" போகிற போக்கில் கடாசி விட்டுப் போகிறார் விசையுந்து வண்டி ஓட்டுபவர்.
            விகடு பார்த்த போது சாலையில் எந்த வாகனமும் இல்லை. சாலையில் பாதி திருப்புவதற்குள் எங்கிருந்தோ வேக பிசாசை ஏமாற்றி விட்டு கடந்து போகிறது அந்த விசையுந்து.
            சாலை ஒன்றுதான். விகடு கணித்த சாலை வேறு. விசையுந்து ஓட்டுபவர் கணித்த சாலை வேறு. விகடு எதையும் 20 லிருந்து 40 கி.மீ. வேகத்துக்குக் கணிக்கிறார். விசையுந்து ஓட்டுபவர் கணித்தது 100 லிருந்து 180 கி.மீ. வேகத்துக்கு. மறுபடியும் எண்கள் வந்து விட்டன. அட போங்கள் ஐயா! மீண்டும் விசயத்துக்கு வருவோம். இரண்டும் ஒத்துப் போகவில்லை. இருவர் கணித்ததும் சரிதான். கணிப்பில் தவறில்லை. இருவர் கணிப்பதும் ஒத்துப் போகாத போது சாலை ஒரு விபத்தைச் சந்திக்க நேரிடும்.
            சாலையின் ஓரங்களில் வேக அளவு ஏன் எழுதியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. நத்தை போல ஊரும் மாநகர சாலைகளுக்கு வேக அளவு மரவட்டையைக் குழம்ப செய்து விடும். வாகன நெருக்கடி மிகுந்த மாநகரச் சாலையில் விசையுந்து ஓட்டுபவர் எப்படி அப்படி ஒரு வேகத்தைக் கணிக்கிறாரோ? இன்னும் அப்டேட் ஆகாமல் விகடு ஏன் 40 கி.மீ.க்குள் இருக்கிறாரோ? மாநகரப் பேருந்தின் வேகத்தை ரசிப்பவர் நிலை இதில் என்ன? வேகத்தின் விழிப்புணர்வு எண் 108 ஆகும். அதன் சத்தம், இசை 108 ஆம்புலன்சின் ஊவ்... ஊவ்... ஊவ் என்பதாகும். பொருள் புரியாதவர்கள் லிப்கோ டிக்சனரியைப் புரட்டிப் பாருங்கள்.
            இன்றைக்கு இது போதும். நீங்கள் நிரம்பு குழம்பியிருப்பீர்கள். ராக்கெட்டின் வேகத்துக்கு ஈடு கொடுத்துச் சிந்தித்தால் சிறிது புரியக்கூடும். கெளண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகட்டும். வெற்றிகரமாக மந்திரயானை நிலைநிறுத்துங்கள். சாமர்சால்ட் கற்பனைகளை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...