6 Oct 2019

1.2



லிங்கன் எனும் இலக்கியவாதி
            ஆபிரகாம் லிங்கன் இலக்கியத்தில் இருந்திருக்க வேண்டியவர். அவர் தவறிப் போய் அரசியலுக்குப் போய் விடுகிறார். இலக்கியத்தில் இருந்திருந்தால் இதில் இருக்கும் நிற வெறி, சாதி வெறி, மத வெறி எல்லாவற்றையும் அகற்றியிருப்பார். அதை அகற்றியதாலே அவரைச் சாகடித்திருப்பார்கள். அரசியலிலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. அரசியல் இலக்கியத்தின் முன்னோடி. அரசியலில் நிகழ்ந்தது ஏன் இலக்கியத்தில் நிகழ்ந்திருக்கக் கூடாது. அவர் இலக்கியத்திற்கு வந்து இறந்திருக்க வேண்டும். காலம் வேறு மாதிரியாக நினைத்தன் விளைவு அவர் அரசியலுக்குள் பிரவேசித்திருக்கிறார். இதனால்தாம் காலத்தைப் பிடிக்கவில்லை என்கிறேன். ஆபிரகாம் லிங்கன் இலக்கியத்திற்குள் வராததால் இலக்கியம் எவ்வளவு இழந்திருக்கிறது தெரியுமா?
ஆபிரகாம் லிங்கன் சொல்லியிருப்பார்,
"வாசகர்களால் வாசகர்களுக்காக எழுதப்படுவதே நாவல்" என்று.
இன்று ஆபிரகாம் லிங்கனுக்காக நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இலக்கிய உலகின் பேரிழப்பு.
            எதிர்பார்ப்பது எங்கே நடக்கிறது? அப்படி நடக்கும் இடம் உலகில் இருந்தால் ஒரு கிரெளண்ட் வாங்கிப் போட வேண்டும். ஏதோ நடக்கிறது. தமிழ் நிலம் அதற்குப் பரவாயில்லை. இந்தப் பிரச்சனை நேர்ந்து விடக் கூடாது என்று பாரதியார் இலக்கியத்திலும் இருந்தார், அரசியலிலும் இருந்தார். இரண்டிலும் இருந்தவரை யானை கொன்று தீர்க்கிறது. இது அப்படியே இருக்கட்டும். எதிர்பார்ப்புகள் நடைபெறாத போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது, தாய்ப்பால் கொடுக்க விருப்பமில்லாத ஒருத்தி கள்ளிப்பால் கொடுப்பதைப் போல. ஆபிரகாம் லிங்கன் இலக்கியத்திற்குள் வராத வேதனையில் பேச வேண்டியிருக்கிறது.
            நேற்று நாம் விவாதிப்பதாகச் சொன்ன விசயம் சுத்தமாக மறந்து போயிற்று பாருங்கள். மறதிக்கு மாத்திரை தேவையில்லை. ஞாபகத்திற்குத்தான் தேவையாக இருக்கிறது. நான்கு குளுக்கோவிட்டா போல்ட்ஸ் போட்டுக் கொள்ள வேண்டும். ஸ்ட்ராங்கர், டாலர், சார்ப்பர் ஆர்லிக்ஸ் ரெண்டு கோப்பைகள் குடிக்க வேண்டும். வல்லாரை இலை இரண்டு படி கசக்கித் தின்ன வேண்டும். அதை நாளைக்குப் பார்ப்போம். நாளைக்கும் கவனச்சிதறலாகப் பேசி அதை விட்டு விடக் கூடாது.
முக்கியமான பின்குறிப்பு :
நாவலுக்கு வாசகர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. நாவலுக்கு உரிய தரத்துடன் அனுப்பப்படுபவைகள் வேண்டாம். நாவலுக்குரிய தரமற்றவைகளே எதிர்பார்க்கப்படுகிறது. நாவலுக்கான கச்சாப் பொருளை வழங்க விரையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
            (நாளைய சரக்கு இன்று மாறி விட்டதால் இது 1.2 ஆகவும், நாளைய சரக்கு 1.1 ஆகவும் இருப்பதாக! இறைவன் நமக்கு அருள் புரிவாராக!)
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...