6 Sept 2019

சொல் வழி கருத்துகள்


சொல் வழி கருத்துகள்
            சொற்களின் வழியாகக் கருத்துகளை எவ்வளவு கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு எஸ்.கே. ஓர் உதாரணம்.
            ஒரு புத்தகக் கண்காட்சி விழாவில் எஸ்.கே. இப்படிப் பேசினார்,
            "எத்தனை ஊடகங்கள் தோன்றினாலும் யாருக்கும் எந்த விதத் தொந்தரவும் தராமல் அறிவை வளர்ப்பது புத்தகங்களே!" என்று.
            ஊடக அன்பர்கள் எழுந்து போய் விட்டார்கள்.
            அவரது பேச்சு எந்த ஊடகத்திலும் வராமல் போய் விட்டது. பத்திரிகையில் தன்னுடைய பேச்சு வரும் என்று எதிர்பார்த்த எஸ்.கே.வுக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது. உண்மையை உரக்க பேசும் போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை அன்றிலிருந்து கற்றுக் கொண்டார் எஸ்.கே.
*****
எங்கும் இல்லை என்பதே பேச்சு!
            சுற்றிப் பார்த்தால் சுகாதாரத்தைப் பற்றிச் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. நகரம், கிராமம் என்று பாகுபாடில்லாமல் விதிமீறல்களுக்குப் பஞ்சம் இல்லை. எதைக் கேட்டாலும் நிதி இல்லை என்பவர்களுக்கு ஊழல் செய்யவும், லஞ்சம் வாங்கவும் மட்டும் எங்கேயிருந்து நிதி வருகிறது என்று புரியவில்லை. இடத்தின் அழகு என்பது அடுத்த பட்சமாக இருந்தாலும் அதன் சுகாதாரத்துக்காக கொஞ்சமாவது செலவழிக்கலாம். நம் வீட்டுக்குள் துர்நாற்றம் வராமல் பார்த்துக் கொள்வதில் அக்கறையாக இருக்கும் ஒவ்வொருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதில் ஈடுபடாமல் இல்லை. நம் நாட்டில் இல்லைகளுக்குப் பஞ்சம் இல்லை. அதனால் உருவாகும் தொல்லைகளுக்கும் பஞ்சம் இல்லை. எளிய மக்களுக்கு இங்கு எந்த உரிமைகளும் இல்லை. எல்லா உரிமைகளும் இருக்கும் மக்களுக்குக் கடமையைத் தட்டிக் கழிப்பது ஒன்றும் புதியது இல்லை. இல்லைகளின் தேசமாகி விட்டது நம் தேசம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...