தனிமையைக்
கொஞ்சம் எடுத்துக் கொள்
உளைச்சலைக்
கொஞ்சம் வாங்கிக் கொள்
அழுத்தம்
கொஞ்சம் பெற்றுக் கொள்
வேதனைகள்
கைகளில்
மரம்
போல் வளர்வதைப் பார்
துயரங்கள்
சுற்றிலும்
கொடிகள்
போல் பின்னுவதைப் பார்
நெருக்கடிகள்
நெருங்கி நெலுங்கி
பிராண்டிப்
பார்ப்பதைப் பார்
மலை
போல் பொறுத்துக் கொண்டதில்
மரம்
வளரட்டும்
கொடிகள்
பின்னட்டும்
பிராண்டிப்
பார்க்கட்டும்
வளர்ந்த
மரங்களுக்கு
பின்னிய
கொடிகளுக்கு
மலையைப்
பெரிதாக்கிக் காட்டியதற்கு நன்றி
பிராண்டியப்
பற்களுக்கு வாழ்த்து
பிராண்டி
உடைந்தப் பற்களில்
சிலவற்றை
எடுத்துச்
சிரித்துக்
கொள்ளாதோ மலை
*****
No comments:
Post a Comment