24 Sept 2019

மீண்டும் சில வரி கதைகளுக்கு...

மீண்டும் சில வரி கதைகளுக்கு...
குத்துதல்
            பெண்களுக்கு மூக்குக் குத்தினால் அதுக்கு நல்லது, இதுக்கு நல்லது என்று ஏகப்பட்ட செய்திகள் புலனத்தில் வந்து குவிந்ததைப் பார்த்து அதிசயத்துப் போய் நிற்கிறான் ஆனந்தன். பிறகு ஏனடா ஆண்கள் எல்லாம் மூக்கு குத்தாமல் அலைகிறார்கள்? என்ற கேள்வி மெலெழும்ப அலைபாய்ந்து நிற்கிறான் அவன். யாருக்காவது எதையாவது குத்தி விடாமல் புலனத்தில் இருந்தென்ன பயன் என்று கொலுசு போடுவதன் நன்மைகள் குறித்தும், டாட்டூக்கள் குத்துவது குறித்த மருத்துவப் பயன்பாடுகள் பற்றியும் ஒற்றை விரலால் நோண்டி நோண்டி புலனத்தில் குத்த ஆரம்பிக்கிறான் ஆனந்தன்.
*****
அப்படியானால் நீ யார்?
            "நேரமே இல்லை!" என்றான் சிந்தனையாளன் சிகண்டிவீரன்.
            "அப்படியானால், நீ சிந்தனையாளன் இல்லை. சமூக விரோதி!" என்றான் திகம்பரசாமி.
*****
ஒரு கிலோ உயிர் பார்சல்!
            "இந்த வதந்திக்கு உயிர் வேண்டும்!" என்றாள் வசந்தி.
            "வாட்ஸப்பில் பரப்பி விடு!" என்றாள் வானதி.
*****
ஒன் பைன் மார்னிங்!
            "பரபரப்புன்னா என்னப்பா?" என்கிறான் முருகன் அப்பாவிடம்.
            "பிரேக்கிங் நியூஸ்!" என்கிறார் அப்பா ஆலோலசிவன்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...