8 Aug 2019

பஞ்ச தந்திரங்கள்



பஞ்ச தந்திரங்கள்
            ‍வேலைக்குப் போய்தான்  சம்பாதிக்க வேண்டும் என்றில்லை. அரசியல் கூட்டத்துக்குப் போயும் சம்பாதிக்கலாம். மேலும் உழைத்துதான் உண்ண வேண்டும் என்றில்லை, அரசியல் கூட்டங்களுக்குப் போனால் பிரியாணியே துன்னலாம்.
*****
அவர்களை அழிக்க யாரும் தேவையில்லை. அவர்களின் வாக்குறுதிகளாலே அவர்கள் அழிந்து போவார்கள். வாக்குறுதி கொடுப்பவர்களை அழிக்க நினைக்காதீர்கள்!
*****
ரெளடிகள் திருந்தினால் பெட்டிக்கடைதான் வைக்க வேண்டுமா? அல்லது ஆட்டோதான் ஓட்ட வேண்டுமா? இது ஒரு வகை மாற்றம்தான். இதுவே பழைய சினிமாக்கள் என்றால் அவர் மூட்டை தூக்கப் போய் விடுவார்கள். சமூக மாற்றத்தை சினிமாவில் தேடாதீர்கள்!
*****
            விசாரணை மன்றம் என்று சொல்லப்பட்ட அந்த இடத்துக்கு அலைந்து பார்த்த பிறகு எஸ்.கே. தனது டைரியில் இப்படி எழுதினார், 'கொலை பாதகர்களை மன்னித்து விடலாம்!' ‍அநேகக் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதீதமாக உணர்ச்சிவசப்படாதீர்கள்!
*****
            சூடான தேநீரோடு பேச எவ்வளவு விசயங்கள் இருந்தன! கடைசியில் ஆறிப் போய் விட்டது தேநீர் பேசுவதற்கு எதுவுமில்லாமல்! விசயங்கள் பேசப்படாமல் இருக்க தேநீரை ஆற விடுங்கள்!
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...