21 Aug 2019

பராபரக் கண்ணியவானரே



டேக் கேர்
நாய் வளர்ப்பாம்
பூனை வளர்ப்பாம்
தொட்டியில மீனு வளர்ப்பாம்
கூண்டுக்குள்ள பறவ வளர்ப்பாம்
பெத்தவங்கள
முதியோர் இல்லத்துல
வளர்ப்பாம்
*****
போபியா
ரொம்ப பயமாக்கீது
ரெண்டு ரவுண்டு வுட்டுக்குன்னு
வந்திடறம்ன்னு
சொன்ன பிற்பாடு
போனவியங்களுக்கு
பயம் போய்க்கின்னே இருக்கீது
இருப்பவியங்களுக்கு
பயம் வந்துகின்னே இருக்கீது
*****
பராபரக் கண்ணியவானரே
சுத்தம் செய்து கொண்டிரு
சுத்தமாக இருக்கும்
கண்டு கொள்ளாமல் விட்டு விடு
சுத்தமாக இருக்கும்
சுத்தம் செய்யாமல்
கண்டு கொள்ள நினையாதே
மன அழுக்குச் சேர்ந்து விடும்
மனதில் புழுத்த
அத்தர் வாசனையின்
வண்ண வெளுப்புடை மானிடரே
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...