17 Aug 2019

எதுவுமே மாறவில்லை!



            காலம் மாறிடுச்சின்னு சொல்றாங்களே! எங்கே காலம் மாறிடுச்சி சொல்லுங்க! அது அப்படியேத்தான் இருக்குது. நாம்மதான் காலண்டரைக் கிழிச்சிட்டு பாத்தியா நேத்தி பதினைஞ்சாம் தேதி, இன்னிக்குப் பதினாறாம் தேதின்னு சொல்லிகிட்டுத் திரியறோம்.
            நேத்தி மாதிரிதான் இன்னிக்கும் இருக்குது. இன்னிக்கு மாதிரிதான் நாளைக்கும் இருக்கப் போவுது. மழைக்காலம் வந்தா "எப்பதான் இந்த சனியன் நிக்கும்னே தெரியலியே"ன்னு சொல்றதுக்கு அப்பவும், இப்பவும் ஊர்ல நாலு பேரு இருக்கான். அது மாதிரியே வெயிலு வந்துட்டா போதும், "அட ஸ்ப்ப்பா என்னா வெயிலு என்னா வெயிலு வானத்துல ஒரு மழைதண்ணி தட்டுப்படுதா?"ன்னு சொல்றதுக்கு ஊருல நாலு பேரு இருக்கான்.
            பெய்ய வேண்டிய மழை பேஞ்சிடும். அடிக்க வேண்டிய வெயிலு அடிச்சிடுது. கொஞ்சம் முன்ன பின்ன பேஞ்சிடுது. அடிச்சிடுது. அவ்வளவுதான் வித்தியாசம். முன்ன நாளைக்கு நின்னு நிதானமாக பேஞ்ச மழை இப்போ மூணு நாளு, நாளு நாளுல்ல கதைய முடிச்சிகிட்டு வெள்ளமா அடிச்சிகிட்டு அவசரம் அவசரமா சீனாவுக்கோ, அமெரிக்காவுக்கோப் போயிடுது. நம்ம பயலுகளும் அதைத்தானே செய்யுறானுங்க. வந்ததும் வராதுமா பறக்குறதுலதான் நிக்குறாங்க. ‍அதை அப்பிடியே மழையும் செய்யுது.
            இவனுங்க ஏசி வாங்கி வைக்கிறதாலதான் பயங்கராம அடிக்கிறதா வெயிலு சொல்லுது. விஞ்ஞானிகள கேட்டாலும் அப்படித்தான மாத்திச் சொல்றாங்க. ஏசில்லாம் வாங்கி வைக்கிறதாலதான் உலகத்தோட வெப்பநிலை அதிகரிக்குதுன்னு.
            எல்லாத்தியும் விட முக்கியமான பிரச்சனை என்னான்னா... அப்பவும் வரவு எட்டணா, செலவு பத்தணான்னுதான் சொன்னாங்க. இப்பவும் அப்படித்தானே இருக்குது. ஒரு பங்கு சம்பாதிச்சா ரெண்டு பங்கு செலவு வருது. ரெண்டு மடங்கு சம்பளம் உசந்தால் நாலு பங்கு கடன் அதிகமாகுது.
            நாமதான் சொல்லிக்கணும், காலம் மாறிப் போயிடுச்சேன்னு. இந்த வருமானம் அதிகரிக்கிற மாதிரி அதிகரிக்கிறது. அதை விட செலவும், கடனும் ரன்னிங் ரேஸ்ல முந்திகிட்டு ஓடுற மாதிரி அதிகரிச்சு ஓடுது.
            நிஜமா காலம் மாறிடுச்சுன்னா வருமானம் அதிகமாகி, கடனும் செலவும் குறையணும். இங்கே செலவும், கடனும் அதிகமாகுதுன்னு பேருக்குக் கொஞ்சம் வருமானத்த அதிகரிச்சிட்டு காலம் மாறிடுச்சுன்னு சொல்றதுல பொருத்தம் ஏதும் இல்ல. தனிநபர் பொருளாதார உயர்வுங்றது அவன் சம்பாதிக்கிறதுல இல்ல. அந்தச்  சம்பளத்தக் கொண்டு அவன் கடனையும், செலவையும் எப்படிச் சமாளிக்க முடியுது அப்படிங்றதுலதானம் இருக்கு. லட்சம் ரூவா சம்பளம் வந்து இட்டிலி ஒண்ணு ஐயாயிரத்துக்கு வித்தா என்ன பண்ண முடியும் சொல்லுங்க!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...