16 Aug 2019

நூற்றாண்டுகளை நொறுக்கும் கேள்வி



உம் மலத்தை அள்ளுவது
எம் வேலையாயிற்று
உம் காலணியைத் தைப்பது
எம் தொழிலாயிற்று
உம் காலில் விழுவது
எம் வழக்கமாயிற்று
உம் நாறும் உள்ளாடைகள் வரைத் துவைப்பது
எம் பழக்கமாயிற்று
உம்மிடம் உதைகள் வாங்குவது
எம் நாகரிகம் ஆயிற்று
உம்மிடமிருந்து அடிகள் விழுவது
எம் கலாச்சாரம் ஆயிற்று
உம்மிடமிருந்து நாராசச் சொற்களைப் பொறுப்பது
எம் பண்பாடு ஆயிற்று
உம்மை எதிர்த்து ஒரு கேள்வி
ஒரே ஒரு கேள்வி
அது எம் நூற்றாண்டு கனா ஆயிற்று
ஒரு கேள்வி ஒரே ஒரு கேள்வி
நூற்றாண்டுகளை
அடித்து நொறுக்கும் என்பதை
நீ
கேள்விபட்டிருக்க மாட்டாய்
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...