15 Aug 2019

வழி திரும்புதல்



உனக்குப் பிடித்தால்
எடுத்துச் செல்
கொஞ்சம் பிரியத்தின் அப்பத்தை
துரோகத்தின் ருசியை சுவைத்த பின்
காசுகளின் ஓசை இசையாக இருக்கும்
குருதியின் சிவப்பு உவப்பாக இருக்கும்
கொள்ளையிடுதலின் குதூகலம் குருகுலமாக இருக்கும்
எளிய அன்பின் முன் மண்டியிட்ட
நாட்களின் நெகிழ்வு இனி திரும்பாது
பரிவில் உருகி வழியும் கண்ணீர் இனி வராது
தீப்பட்டு எரியும் இலை
மரத்தையும் எரிக்கும்
மரணத்தின் முன் மண்டியிடுவதற்கு
மன்னிப்பின் காலடிகளில் வீழ்ந்து கிடக்கலாம்
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...