12 Aug 2019

ப்ளாக்கி விடாதீர்கள்!



            நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்றால்... அதற்கு தனிப்பட்டியல்தான் போட வேண்டும். ஒரு சுருக்கமான பட்டியல் போட்டோம் என்றால்...
            1. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகத்தான் சங்கங்களை உருவாக்குகிறோம். அந்த சங்கங்களுக்குள்ளே பிரச்சனை என்றால்... கொன்னே புடுவோம் ஓடிப் போயிடு என்கிறார்கள்.
            2. புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தவர்களைக் கண்டுபிடித்து விட முடிகிறது. அதற்கு பட்டா கொடுத்தவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்றால்... என்னடா இப்படி பட்டா போட்டு பேசுகிறாய் என்று மிட்டா மிராசு போல மிரட்டுகிறார்கள்.
            3. ஆயிரம் வகை உணவுகளை அண்மைக் காலமாக பந்தியில் வைக்கிறார்கள். இது என்ன உணவுக் கண்காட்சியா? உண்பதற்கு ஒரு வயிறுதானே இருக்கிறது என்றால்... தின்ன முடியாததை இலையிலேயே வைத்து விட்டுப் போ என்கிறார்கள். தின்ன முடியாததை இலையில் வைப்பதற்கா பந்தி என்றால்... கேட்பவனைத் தின்று விடுவது போல முறைக்கிறார்கள்.
            4. மனிதன் கிறுக்கி கிறுக்கிதான் எழுத்து வந்தது. ஆகவே குழந்தைகள் எழுதத் தொடங்குவதற்கு முன் கிறுக்கத்தான் தொடங்குவார்கள் என்றால்... யாருடா நீ புதுக்கிறுக்கன் என்று திட்டுகிறார்கள் காசு கொடுத்து குழந்தைகளுக்கு காஸ்ட்லி நோட்டும், பேனாவும் வாங்கிக் கொடுத்தவர்கள்.
            5. நிலையான அந்தப் பணி எதற்கு என்றால் அதை பார்ட் டைம் தொழிலாக வைத்துக் கொண்டு, புல் டைமாக தனியாக தொழில் தொடங்குவதற்குதானே என்றால்... பிறகென்ன பார்ட் டைம்மா சேவை பண்றதுக்காகவா வெங்காயம் என்று சிரிக்கிறார்கள்.
            இப்படி இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரே அடியாக பேசி விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசலாம். பேசுவோம். யாரும் ப்ளாக்கி விடுவதற்கான காரியத்தைச் செய்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...