5 Jul 2019

காலாவதியாகிப் போனதன் மேனுவல் புக்!



உங்களால மட்டும் எப்படி சார் டெய்லி ரெகுலரா யோகா செய்ய முடியுது?
டெய்லி அவ்ளோ டென்ஷனாகிறேன் சார்!
*****
இவ்வளவு சொல்லியுமா சார் நம்ப மாட்டேன்ங்றீங்க?
அதனாலான் சார் நம்ப யோசிக்கிறேன்!
*****
இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட
நம்ப முடியாத ஒன்றை நம்ப வைக்க
ஏகப்பட்டக் கட்டுக்கதைகளைக் அவிழ்த்து விட வேண்டும்.
அய்யோ கடவுளே! இதென்ன கொடுமை என்றால்...
என்னைப் பற்றி ஏகப்பட்ட கட்டுக்கதைகள் இருக்கின்றன என்கிறார் கடவுள்.
*****
பழைய பொருட்களில் தேவையானதை வைத்துக் கொள்ளவும், தேவையில்லாததைத் தூக்கி எறியவும் ஒரு ஞாயிற்றுக் கிழமை ஒருங்கமைத்துக் கொணடிருந்த போது...
கிடைத்ததில் ஒன்று 'நோக்கியா 1100' வின் மேனுவல் புக்.
நோக்கியா 1100 வைத் தூக்கி எறிந்தாகி விட்டது.
மேனுவல் புக்கைத் தூக்கி எறிவதா வேண்டாமா?
இப்போது வாங்கியிருக்கும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. மேனுவல் புக் இல்லை.
ஆக வைத்துக் கொள்வது என்று தீர்மானித்தாகிறது.
இப்போது செல்போனும் இருக்கிறது. மேனுவல் புக்கும் இருக்கிறது.
இந்த மேனுவல் புக் அந்த செல்போனுக்கானது இல்லை. ‍ஆனாலுமென்ன! மேனுவல் புக் இருக்கிறது!
இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பின் செல்போனுக்கு மேனுவல் புக் போட்டார்கள் என்பதே நம்ப முடியாத விசயமாகி விடும்.
*****
            நன்றாக ஞாபகம் இருக்கிறது. முன்பு கிராமத்திலிருந்து நகரத்துக்கு காய்கறிகள் போய்க் கொண்டிருந்தன. கிராமத்தில் யாரும் காய்கறிகள் வாங்கியதில்லை. அப்போது எட்டு ஊருக்குச் சேர்த்து இருந்தது ஒரு காய்கறிக் கடை. யார் வீட்டுக்காவது விருந்தாடி யாராவது வந்தால் உருளைக் கிழங்கோ, முட்டை கோஸோ வாங்க மட்டுந்தான் அப்போது காய்கறிக் கடை.
            இப்போது பாருங்கள்! கிராமத்திலிருந்து நகரத்திற்குக் காய்கறிகள் போன நிலை மாறி, நகரத்திலிருந்து காய்கறிகள் கிராமத்துக்கு வருகின்றன. முக்குக்கு ஒரு காய்கறிக் கடை இருக்கிறது. பெட்டிக் கடையிலும் ஒரு பகுதியாக காய்கறிக் கடை இருக்கிறது. பச்சை மிளகாய், தக்காளி வாங்குவது என்றாலும் காய்கறிக் கடைதான்.
            கிராமங்கள் நகரங்களுக்கான வியாபார மூலங்களாக இருந்த நிலை மாறி, நகரங்களுக்கான வியாபார மூலங்களாக கிராமங்கள் மாறிக் கொண்டு இருக்கின்றன.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...