4 Jul 2019

குடிமகன்களுக்குத் தண்ணீர் பஞ்சமில்லை!



            தண்ணிப் பிரச்சனை அதிகமாகிட்டே போவுது.
            இவ்வளவு தண்ணிப் பிரச்சனையிலும் நம்மூரு ஆளுங்களுக்கு மட்டும் எங்கேருந்து சரக்கு கிடைக்குதோ தெரியல.
            நம்மூரு பொம்பளைக தண்ணிக்காக தெரு தெருவா, ரோடு ரோடா அலைஞ்சா, நம்ம ஆளுக மட்டும் அலட்டிக்காம அசால்ட்டா என்ன வேகத்துல சரக்கோட போட்டுட்டு விழுந்தடிச்சி கிடக்குறாங்க தெரியுமா!
            இருக்குற தண்ணிப் பஞ்சத்துல கொழாய்களை எல்லாம் மூடிப்புட்டானுக, கொழாய்க இருந்தாத்தானே தெரு பிரச்சனை, ஊரு பிரச்சனை அப்பிடி இப்பிடின்னு தண்ணிப் பிரச்சனை வருதுன்னு. ஆனா பாருங்க ஊருல வர்ற அத்தன பிரச்சனைக்கும் காரணமா இருக்குற டாஸ்மாக்க மூடுனதா இதுவரிக்கும் தகவலில்ல. இன்னும் டாஸ்மாக்க அடுத்தடுத்ததா தொறந்துட்டுப் போறதா பேசிக்கிறாக.
            போறப் போக்க பாத்த ஊருக்குள்ள தண்ணிக் கொழாய்களே இல்லன்னு பிராது கொடுக்குற மாரி ஆயிடும் போலருக்கு! அதே மாரி ஊருல டாஸ்மாக்கத் தவிர வேற கடைகளே இல்லைங்ற மாரி ஆயிடும் போலருக்கு!
            இந்த டாஸ்மாக்கு சரக்கு தயாரிக்கிறதுக்குச் சொட்டு தண்ணி கெடைக்காம போனத்தாம் நம்ம குடிமகன்க தண்ணிப் பிரச்சனைப் பத்தி கவலப்படுவானுக போலருக்கு.
            இதப் பத்தியெல்லாம் நம்ம குடிமகன்ககிட்ட பேசவும் கொஞ்சம் யோஜனையா இருக்குப் பாருங்க! இத நாமச் சொல்லி, அத அவுக கேட்டு, அந்தக் கவலையிலதாம் இன்னும் ரண்டு டாஸ்மாக்க தேடிப் போயி குடிக்கறன்னு சொல்லிடக் கூடாது பாருங்க!
            நாட்டில் குடிமகன்களுக்குப் பஞ்சமில்லை!

            குடிமகன்களுக்குத் தண்ணீர் பஞ்சமில்லை!!
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...