27 Jul 2019

காலத்தின் ஞானம் பொருந்திய வாசகம்!



            இந்தக் கல்வியைப் படிக்க ஆரம்பிக்கும் போதே முதல் வகுப்பிலேயே 'சிறு குடும்பம் சீரான குடும்பம்' என்பதைப் படிக்க வேண்டியதாகிறது.
            அந்த சின்னஞ்சிறு வயதிலேயே அந்தக் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய ஞானத்தை நாம் தர வேண்டியிருக்கிறது பாருங்கள்!
            சிறு குடும்பமாக இருந்தால்தான் சொத்தைச் சேர்க்காவிட்டாலும் சொத்தை அழிக்காமல் கல்வியைக் கொடுக்க முடியும். பெரும் குடும்பம் என்றால் சொத்தை அழித்துதான் எல்லா பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டியிருக்கும். நாட்டில் கல்விக் கட்டணம் கொஞ்சமா நஞ்சமா என்ன?
            முதல் வகுப்பிலேயே சிறு குடும்பம் சீரான குடும்பம் என்று படிப்பதை அவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் போனாலும் மறந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆஸ்பிட்டல் சுவர் வரைக்கும் அதை எழுதி வைத்திருக்கிறார்கள்.
            ஏன் ஆஸ்பிட்டல் சுவர்களில் அதை எழுதி வைக்கிறார்கள் என்றால் ஓரிரு பிள்ளைகள் என்றால் நோய் நொடி எனும் போது இருக்கிற காசை வைத்து வைத்தியம் பார்த்து பிள்ளைகளைக் காபந்து பண்ணி விடலாம். இல்லையென்றால்... எக்ஸாக்ட்டாக நீங்கள் நினைப்பது சரிதான்! சொத்தை அழித்துதான் வைத்தியத்துக்கு செலவு செய்து பிள்ளைகளைக் காபந்து செய்ய வேண்டியிருக்கும். இந்தக் காலத்தில் இருக்கின்ற காசுக்கு வந்து போகிற நோய் நொடிகள் கொஞ்சமா நஞ்சமா என்ன?
            சிறு குடும்பம் சீரான குடும்பம் என்ற வாக்கியத்தை நாம் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது. காலத்தின் ஞானம் பொருந்திய வாசகம் அது.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...