22 Jul 2019

சூதாடிச் சித்தனும் நாக்குபொடிச் சித்தனும்



            சூதாடிச் சித்தன் சொல்கிறான், "ஹைட்ரோ கார்பன், மீத்தேனில் வருகிற பணத்தை விட அதிக பணத்தை வருங்காலத்தல் அரசுகள் தண்ணீருக்காகச் செலவிடப் போகின்றன"
            நாக்குபொடிச் சித்தன் சும்மா இருப்பானா? "தமிழ் நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. முதல் நான்கு நிலங்களில் வாழ்ந்தும் பழக்கப்பட்டாகி விட்டது! பாலை நிலத்தில் வாழ்ந்து பழக்கபட்டாகிக் கொண்டிருக்கிறது!" என்கிறான் நாக்குபொடிச் சித்தன்.
            ரெண்டு பேருக்கும் பேசியதில் நாக்கு வறண்டு போகிறது.
            சொட்டு தண்ணீர் கொடுக்க ஆளில்லை.
            நாக்கு பொடிச் சித்தனாது கொஞ்சம் நாக்கு பொடியை எடுத்து நாக்கில் போட்டுக் கொள்கிறான். சூதடிச் சித்தனுக்கு நாக்கு பொடி போட்டு பழக்கமில்லை என்பதால் வேண்டாம் என்கிறான்.
            "ஜீவ சமாதிக்கு தயாரோவாம் வா!" என்கிறான் சூதாடிச் சித்தன்.
            இருவரும் தயாராகிறார்கள்.
            ஒரு ஜீவ சமாதி அங்கே உருவாகிறது.
            வருங்காலத்தில் அந்தச் சித்தர்களுக்கு வேண்டிக் கொண்டு சொட்டு நீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்து படைத்து வழிபட்டுப் போகிறார்கள் மக்கள்!
*****
எங்கே போயாகிறது தெரியுமா?
            சைக்கிள் வாங்குவது பெரிய கதையாக இருந்த அந்தக் காலத்தில் மழை பெய்தால் குடையை எடுத்துக் கொண்டு நடைபயணமாகவே கிளம்பி விடுவார் தாடி தாத்தா.
            டூவீலர் வாங்குவது சர்வ சாதாரணமாகி விட்ட காலத்தில் அவரது பையன் மழை பெய்தால் ரெயின் கோட்டைப் போட்டுக் கொண்டு டூவீலரில் கிளம்பிக் கொண்டிருந்தார்.
            இப்போது மழையோ, வெயிலோ அவரது பேரன் காரை எடுத்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறான்.
            "எங்கே போயாகிறது?" என்று கேட்டால்... "வண்டி வெளியே கிளம்பாம அப்படியே கிடக்குல்ல. அதாம் அப்படியே ஒரு ரவுண்ட்!" என்கிறான். இந்தக் காரும்தான் பாருங்களேன், அவன் கூப்பிடும் இடத்துக்கு எல்லாம் ர்ர்ருரும் ர்ர்ருரும் என்று போய்க் கொண்டிருக்கிறது.
            கார்களுக்கு எல்லாம் ஆர்டிபீஸியல் இன்டெலிஜென்ஸைப் புகுத்தினால்தான் சரிபட்டு வரும்!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...