20 Jul 2019

கண்டுபிடிப்பார்கள்



இரு சக்கர வாகனத்தில் செல்பவருக்கு
தலைக்கவசத்தை
மகிழ்வுந்தில் செல்பவருக்கு
பாதுகாப்பு வாரை
கப்பலில் செல்பவருக்கு
உயிர் காக்கும் படகுகளை
விமானத்தில் செல்பவருக்கு
பாராசூட்டைக்
கண்டுபிடித்தவர்கள்
கண்டம் விட்டுக் கண்டம் தாவும்
ஏவுகணைக்கும்
பொத்தானை அழுத்தினால் வெடிக்கும்
அணுகுண்டுக்கும்
தானாகச் சென்று தாக்கி விட்டு வரும்
தானியங்கி விமானங்களுக்கும்
ஏதேனும் கண்டுபிடிப்பார்கள்
கலங்காதே கண்ணே
உமக்குக் கண்ணாடி கண்டுபிடித்தவர்கள்
அவர்கள் அன்றோ
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...