2 Jul 2019

நாக்குப்பொடி சித்தரின் நன்மொழிகள்!



            எல்லா செய்திகளுமா செய்திகளாகின்றன?
            செய்திகளுக்குள்ளும் ஓர் அரசியல் இருக்கிறது. எது டிரெண்டிங் ஆகுமோ அதுவே செய்திகளாகின்றன. மற்றவை அனாதைகளாகின்றன.
*****
            உலகத்தில் அதிக கிருமிகள் இருக்கும் இரண்டு இருக்கின்றன. ஒன்று பண நோட்டு. மற்றொன்று செல்பேசி. இரண்டும் பையில் இருக்கின்றன. அல்லது கையில் இருக்கின்றன. அதனால்தாம் நாம் அடிக்கடி மருத்துவமனையில் இருக்கிறோம்.
*****
            உண்மையான மாற்றங்கள் எதையும் பத்திரிகைகளோ, ஊடகங்களோ காட்டுவதில்லை. அவை எதையும் நடப்பதைப் போல காட்ட முயலுகின்றன. உண்மையான மாற்றங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. ஏனென்று கேட்காதீர்கள்! உண்மையான மாற்றங்களில் அவ்வளவு சுவாரசியங்கள் இல்லை.
*****
            தங்கத்தை விட தண்ணீர் மேலானது. எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. கூடிய சீக்கிரத்தில் தங்கம் விற்கும் கடைகளில் மட்டுமே கிடைக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். தங்க நகைக் கடைகளுக்குப் பதில் தண்ணீர் விற்கும் கடைகளுக்கு நகைக்கடைகள் மாறலாம். தெரியாத்தனமா நகைக்கடை ஆரம்பிச்சிட்டேன் என்று பின்னாடி வருத்தப்படுவதற்கு முன்னாடி கடைக்காரர்கள் விழித்துக் கொள்வது நல்லதுதானே! ஏதோ, இந்த நாக்குப்பொடி சித்தனால் முடிந்தது அவ்வளவுதானே!
*****
            சிக்கனம் என்பது இல்லாமையாலே, இயலாமையாலோ ஏற்படுவதை விட, இருக்கும் போதே, இயலும் போதே ஏற்பட்டு விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நாட்டில் ஒருத்தன் நன்றாக இருப்பது இன்னொருத்தனுக்கு எங்கே பிடிக்கிறது, சிக்கனம் பிடிப்பதற்கு? நல்லதுதான் யாருக்குமே பிடிக்காதே! சிக்கனம் யாருக்கும் பிடிக்காமலே போய் விட்டது போங்கள்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...