19 Jul 2019

கால மிருகம்



இந்த உலகில் ரத்தம் காயம்
துண்டிப்பு இழப்பு தனிமை என
சில துயர்களை நீங்கள் நிறுவியிருக்கலாம்
உலகம் அன்புக்காக ஏங்குகிறது
நீங்கள் பீடீங் பாட்டிலைப் பிடுங்கி
எரிபொருளை நிரப்பித் தரலாம்
எரிபொருள் நிரம்பியதில்
உலகம் வேகமாகச் சுழலாம்
கைகளில் வைத்திருந்த கிலுகிலுப்பைக்கு
ஆயுதங்களை நீங்கள் பரிமாற்றியிருக்கலாம்
ஏதோ ஒரு குண்டின் குறி
உங்கள் தலைக்கும் வைக்கப்பட்டு இருக்கலாம்
எதுவும் வியாபரம் ஆகிறது என்பதற்காக
காசைத் தின்ன முடியாது
ஊட்டி விட அன்பான கைகள் வேண்டியிருக்கும்
அரவணைக்கும் கைகள் தட்டி விடாத வரை
ஒரு நொடி இருப்பின் சுமை
உங்களுக்குப் புரியப் போவதில்லை
காலம் மோசமான சுமையைத்
தலையில் வைக்கும் மிருகம்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...