11 Jul 2019

கவலை மேல கவலை



            இந்த டவுனுப் பக்கம் போனா,
            வாட்டரு பாக்கெட்டு ரெண்டு ரூவாங்ங்றாம்! பாட்டிலுன்னா பதினெட்டு ரூவாங்றாம்!
            அந்தத் தண்ணிய குடிச்சுபுட்டு ஒண்ணுக்குப் போகணும்னா ரண்டு ரூவாங்றாம்! ரெண்டுக்குப் போகணும்னா அஞ்சு ரூவாங்றாம்!
            பாலத்துப் பக்கமா போனா கீழே ஓடுற ஆத்தோட நாத்தம் தாங்க முடியல. மூக்கப் பொத்திக்க வேண்டிருக்கு.
            ரோட்ட ரெண்டுப் பக்கமும் பாக்க சகிக்கல. அவ்ளோ கலீஜா இருக்குது.
            வாகனங்க ஒவ்வொண்ணும் கரிய துப்பாத கொறதாம். கருப்பு கருப்பா காத்துல வரஞ்சிட்டுப் போகுதுங்க.
            காந்தி சாலை, பெரியார் பாதை, அண்ணா சாலைன்னு ரெண்டு சாலை திரும்புறதுக்குள்ள டாஸ்மாக்கு. அதுல தண்ணிய அடிச்சிபுட்டு அங்க, இங்கன்னு எங்க பாத்தாலும் ஒண்ணுக்கு அடிச்சி வெச்சிட்டு கூட்டமா நிக்குறானுங்கோ.
            ஏம்ப்பா இந்த நாட்டுல எதைஎதையோ இலவசமாக விலையில்லான்னு பேரு போட்டு கொடுக்குறீங்க.
            நல்ல தண்ணிய, நல்ல காத்த, நல்ல சுற்றுப்புறத்த, சுத்தம், சுகாதாரத்த இலவசமா, விலையில்லாம கொடுக்கப்படாதா!
            திங்குற அரிசி இலவசமா விலையில்லாமத்தான் கெடைக்குது. அத தின்னுபுட்டு டாய்லெட்டுப் போகணும்னா அஞ்சு ரூவா தேவைப்படுது. மிக்ஸி, கிரைண்டர், பேனு, டி.வி. இப்பிடின்னு இலவசமா கொடுக்குறதுக்கு நெறைய இருந்தாலும் அதை விட முக்கியமா ஆரோக்கியமான வாழ்க்கையை மக்களுக்கு இலவசமா கொடுக்க வேண்டிய கடமை ரொம்பவே இருக்கு.
            இந்த டாஸ்மாக்குதாசனுங்க எவ்வளவு காசுன்னாலும் அவ்வளவு நெறய காசு கொடுத்துட்டுதானே குடிக்குறானுங்க. காசு கொடுத்துட்டு குடிக்குற அவனுங்களுக்காவது ஒரு நல்ல சுகாதாரமான கழிப்பறையைக் கட்டிக் கொடுக்கப்புடாதா?
            சுத்தமான காற்று,
            சுகாதாரமான சுற்றுப்புறம்,
            சுத்தமான தண்ணீர்,
            சுத்தமான கழிவறைகள் இப்பிடின்னு இல்லாமா நமக்குக் கிடைக்கிற இலவசங்கள் இந்த மாதிரியே இருந்துடுமான்னா அது ஒரு பக்கம் கவலையா இருக்கு! ரொம்ப கவலைப்பட்டு அது வேற பி.பி., சுகர்னு வந்திடுமோன்னு அதுவும் வேற கவலையா இருக்கு!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...