கையெழுத்தா? கைநாட்டா? கைநாட்டுதான்! கையெழுத்துப்
போடுறவனை யார் நம்புகிறார்கள்? கைநாட்டுதானே வைக்கச் சொல்கிறார்கள் பயோமெட்ரிக்கில்!
*****
இது புரிந்தவர்கள்
மின்னஞ்சல் செய்யுங்கள்! தாரளமாக ஞானமடைந்தவர் என்ற பட்டம் கொடுக்கலாம்!
"யாருடைய 6.15?
ஒருவருக்கு 6.15 என்பது இன்னொருவருக்கு
6.05
மற்றொருவருக்கு 6.25"
என்ன புரிந்ததா?
புரியாவிட்டால் விட்டு விடுங்கள்! மின்னஞ்சலை வீணாக்க வேண்டாம்! மின்சார சிக்கனம்!
தேவை இக்கனம்!
*****
புல்லை யார் நடுகிறார்கள்? யார் நீர் பாய்ச்சுகிறார்கள்?
அதற்கெல்லாம் ஆசைபட்டால் புல் விளைய முடியுமா? மாடுதான் தின்ன முடியுமா? நான்தான் இப்படி
எழுத முடியுமா? நீங்கள்தான் இப்படிப் படிக்க முடியுமா?
புல் விளையட்டும் யாரும் நடாமலே! மாடுகளை
மட்டும் போஸ்டரைத் தின்னாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! புல் விளைவதற்கு காங்கிரீட்டைப்
போடாமல் கொஞ்சமாவது இடத்தை விட்டு வையுங்கள்!
*****
வள்ளுவரும் ஓரு காலத்தில் கலர் கலர் ப்ளாஸ்டிக்
குடங்களோடு தண்ணீருக்காக அலைந்திருக்க வேண்டும்! இல்லையேல் நீரின்றி அமையாது உலகு
என்று எப்படி அவ்வளவு சரியாக எழுதியிருக்க முடியும்?
வள்ளுவர் காலத்தில் ப்ளாஸ்டிக் குடங்கள்
இருந்ததா? என்ற கேட்டால்... ஆய்வாளர்களுக்கு நல்ல தலைப்பு கிடைத்து விட்டது என்று சொல்வேன்!
*****
"நான் டாக்டராகி வைத்தியம் பாத்து
யாரையும் சாக வுட மாட்டேன்!" என்று சொன்னப் பிள்ளையைப் பார்த்ததுமே எனக்குச்
சந்தேகமாக இருந்தது! ஏதோ பரீட்சை எழுதிப் பார்த்து தேர்வாகவில்லை என்று மருந்து கொடுத்து
டாக்டராக வேண்டிய பிள்ளை, மருந்து குடிச்சிச் செத்துப் போய் விட்டது!
நம்ம ஊருல உசுரைப் பொழைக்க வைக்குறதையும்
மருந்துங்றானுவோ! உசுரை எடுக்குற கருமத்தையும் மருந்துங்றானுவோ! என்னடா பாஷை பேசுறீங்கன்னு
பொங்கி எழுந்ததும் நாக்குப்பொடியை அள்ளிக் கொண்டு வந்து நாக்கில் கொட்டி விட்டு
போய்ட்டானுவோ படுபாவிப் பயலுவோ! வைரப்பொடி சித்தன்னு பேரு வெச்சிருக்க வேணும்!
*****
மோப்பக் குழையும் அனிச்சம் என்றால்...
மனம் நோகும்படி பேசினால்... டெட்பாடிதான்! மனிதர்கள் நினைத்தால் பேச்சினால் ஒரு டெட்பாடியைக்
குறைக்கலாம்! நினைக்க வேண்டுமே! மனுஷனை மனுஷன் டெட்பாடியாக்குவதில் மனுஷனுக்கு அவ்ளோ
சந்தோஷம்! சந்தோஷம் - அதுதானே இந்த நாக்குப்பொடிச் சித்தனின் பிரசாதம்! எப்படியாவது
சந்தோஷமாக இருந்து தொலைத்தால் சந்தோஷம்தான்! மரண சந்தோஷம்!
*****
No comments:
Post a Comment