12 Jul 2019

நாக்குப்பொடி சித்தரின் நன்மொழிகள் வரிசை - 2



            இன்று கடனாளியாக்கும் மருத்துவமனைகளுக்கு முன்பாக அந்த வேலையை வட்டிக்கடைக்காரர்கள் செய்து கொண்டிருந்தார்கள்! இப்போது மருத்துமனைக்குள்ளே வட்டிக்கடைகள் இருப்பதாகக் கேள்வி!
*****
            கடைசிச் சொட்டுத் தண்ணீரும் வற்றிப் போன பின்புதான் தெரியும் ஹைட்ரோ கார்பன் என்றால் என்னவென்று! அப்புறம் அதைத் தெரிந்து கொண்டு என்னவாகப் போகிறது? ஜாலியாக, ஹாயாக செத்துப் போக வேண்டியதுதான்!
*****
            மீத்தேனை எடுத்தால் அதனால் பூமிக்கு பாதிப்பு! அதை எடுத்த பின் காற்றுக்கு பாதிப்பு! அப்புறம் ஏன்டா அதை எடுக்குறீர்கள்? என்று கேட்டால் உயிரை எடுத்து விடுவோம் என்கிறார்கள்! நீங்கள் மீத்தேனை எடுத்துக் கொள்ளுங்கள்! உயிரை விட்டு விடுங்கள்!
*****
            உரிய நேரத்தில் உரிய தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் இவ்வளவு ரெளடிகள், இவ்வளவு கட்டப்பஞ்சாயத்துக்கள் உருவாகியிருக்காது! ஒருவேளை அப்படி ஆகியிருந்தால், நமக்கு கைப்புள்ளயும், நாய் சேகரும் கிடைத்திருக்க மாட்டார்கள்!
*****
            ‍எடுத்தப் பொருளை எடுத்த இடத்தில் வைக்கிறார்களா? நீயேன் அலுப்புப் படுகிறாய் எடுத்தப் பொருளை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தேட! தேடு! தேடு! தேடு! ஞானம் கிடைக்கும்! எந்தப் பொருளும் எந்த இடத்திலும் இருக்காது! அது இருக்கும் இடத்தில் தேடாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...