9 Jun 2019

புற்றுநோய்க் கட்டிகள்



புதைப்பதெல்லாம்
நம்மை வந்து சேரும் கனிகளாக
கலப்பதெல்லாம்
நம்மை வந்து சேரும் நீராக
எரிப்பதெல்லாம்
நம்மை வந்து சேரும் காற்றாக
அணுக்கழிவுகளைப் புதைக்காதீர்
என்று சொல்வதா
சாக்கடையைக் கலக்காதீர்
என்று சொல்வதா
பாலீதினை எரிக்காதீர்
என்று சொல்வதா
எதையெதை விதைத்தோமோ
நம்மை வந்துச் சேரும்
நின்று விடாது
தலைமுறை நோக்கிப் போகும்
புற்றைக் கட்டி
பாம்புகள் குடியேறக் கூடாதெனவா
சொல்ல முடியும்
சிவன் கழுத்து பாம்பே
ஆதிசேஷா
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...