27 Jun 2019

நக்க ஷூ கொடுங்கள் எஜமானரே!



உங்கள் மருந்து மாத்திரைகள்
விற்க வேண்டும் என்பதற்காக
எங்களிடம் நோய்களை பரப்பினீர்கள்
நீங்கள் உண்ட மிச்சம் மீதி
எச்சில் பண்டங்களைத் தள்ளி விட
எங்களுக்கானச் சந்தைகளை உருவாக்கினர்கள்
உங்களுக்கு உபயோகப்படாத ஆயுதங்களை
கழித்துக் கட்ட
எங்களுக்குள் சண்டையை மூட்டி விட்டீர்கள்
உங்கள் பேராசைத் தாகம் தணிய
எங்கள் நிலத்தடி நீரை
ஆழ்துளையிட்டு உறிஞ்சினீர்கள்
உங்கள் சொகுசு வாகனங்களின் பசி தீர
எங்கள் ஆறுகளை சிறை பிடித்து
எரிவாயு குழாய் பதித்தீர்கள்
உங்கள் உறுப்புகள் சேதமடைந்ததற்கு
எங்கள் உறுப்புகளில்
கதறக் கதறத் துடிக்கத் துடிக்கப்
பரிசோதனை நடத்தினீர்கள்
பகலிலும் நீங்கள் நன்றாகப் படுத்து உறங்க
இரவிலும் உறங்க விடாமல்
உங்கள் வேலைகளை எங்களுக்கு
அவுட்சோர்சிங் செய்தீர்கள்
நவீன அடிமைகள் நாங்கள்
தெண்டனிடுகிறோம் எங்கள் ஆண்டையே
உலக நாட்டாமையே
எங்கள் விந்தணுக்களையும் கருமுட்டைகளையும்
உருவியெடுத்து விட்டு
ஆண்மை பெண்மை தன்மையற்றவர்களாக்கி
சுரணையற்றவர்களாக்கி
இன்னும் இன்னும் கொடுமை செய்யுங்கள்
எங்களுக்குக் குரூர வாழ்வு தந்ததற்காக
உங்களுக்கு நன்றி சொல்லும்
எங்கள் தலைவர்களின் நன்றிகளை
ஏற்றுக் கொள்ளுங்கள் எஜமானரே
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...