4 Jun 2019

அலைந்து திரியும் ஆடு மாடுகள்!



            நம்ம மேல வெயிலுக்கு மட்டும்தான் இரக்கம் போல. பாரபட்சம் இல்லாம எறங்கி அடிக்கிது. மழைக்குக் கொஞ்சம் கூட இரக்கமில்ல. என்ன கோபத்துல எந்த ஊருல போயி அநாதியா பெஞ்சிட்டு இருக்கோ!
            இப்பிடி ஊரு காஞ்சுப் போயி கெடந்தா ஆடு, மாடுக என்ன பண்ணும்? இப்போ நம்ம ஊருல பழக்கம் பாருங்க! யாரும் ஆட்டையோ, மாட்டையோ கட்டுறதில்ல. எல்லாம் அது பாட்டுக்கு ராத்திரி முச்சூடும் தெருவ சுத்திட்டே நிக்குதுங்க. இது மாரி டவுன்ல மாடுக சுத்திப் பாத்ததுதான். இப்போ கிராமத்துலயும் டவுனப் பாத்து கத்துகிட்டாங்க போலருக்கு.
            முன்னாடி இது மாரி கோயிலு மாடும், அய்யனாருக்கு நேந்து விட்ட ஆடுக மட்டுந்தாம் அலயும். ஆனால் இப்போ எல்லா ஆடு, மாடுகளும் கோயிலுக்கு நேந்து விட்டக் கணக்கா அலயுதுங்க. இதுல மாடுங்க இருக்கே, அதுங்க வேலி கொஞ்சம் சாஞ்சிருந்தா போதும் வேலி மேல ஏறி வந்து ஏதோ கொஞ்சம் நஞ்சம் பச்சையா தெரியுற செடிகளயும் தின்னு வெச்சுபுட்டு சாணிய போட்டுட்டுப் போயிடுதுங்க.
            ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த கிருட்டி இப்போ இருந்தா இந்த மாரி சம்பவங்க நடக்குமுங்களா சொல்லுங்க. அப்படியே குந்துனாப்புல உக்காந்துட்டே யாருக்கும் தெரியாமல் கொட்டில்ல புகுந்து கிருட்டி  அப்படியே ஆடு, மாடுகள தூக்கி வித்துட்டுப் போயிடுவாப்ல. இப்போ இது மாரி ஆடு, மாடுக திரியுதுன்னு தெரிஞ்சா கிருட்டிக்கு ரொம்ப கொண்டாட்டாமா போயிருக்கும்.
            இப்படியெல்லாம் நடக்குமுன்னு தெரியாமல கிருட்டி மாரடைப்புல செத்துப் போவாப்லன்னு யாருக்குத் தெரியும் சொல்லுங்க!
            ஊருல இருக்குற ஆடு, மாடுகள தன்னோடது மாரி நெனச்சிக்கிட்டு இந்த கிருட்டிப் பய வித்துட்டு இருக்கிறானேன்னு, இந்த ஊருக்காரகத்தான் அப்போ கிருட்டிய பிடிச்சு போலீஸ் ஸ்டேசன்ல போட்டு திருச்சி ஜெயிலுக்கு போற மாரி பண்ணிட்டாங்க. அதுல மனசொடிஞ்சுப் போன கிருட்டிதான் விடுதலையாயி வந்த கொஞ்ச நாள்ல மனசு திருந்திப் போயி மாரடைப்புல போயிச் சேந்துட்டாப்புல.
            இப்போ இந்த ஊரு மக்க பேசிக்கிற பேச்சு இருக்கே, "அந்தக் கிருட்டிப்பய இருந்தாத்தாம் இந்த ஊரு பய மக்களோட ஆடு, மாடுக அடங்கும்!" அப்பிடின்னு பேசிட்டு திரியுதுங்க!
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...